காலை வணக்கம் .. பல விகற்ப பஃறொடை வெண்பா...
காலை வணக்கம் ..
பல விகற்ப பஃறொடை வெண்பா ..
தனிஅறை ஒன்றில் தவித்து இருக்க
இனிய முகத்தாள் பணிகள் புரிய
அகத்துள் வரவும் இருவிரல் நீட்டி
இழுத்து வெளியே எடுத்ததும் என்னை
ஒருபுறம் வைத்து உரசிய வேளை
சிரசில் பிடித்தது தீ
வெண்டுறை ..
தனிஅறை ஒன்றில் தவித்தேநா னிருக்க
இனிய முகத்தாள் பணிகள் புரிய
அகத்துள் வரவும் இருவிரல் நீட்டி
இழுத்து வெளியே எடுத்ததும் என்னை
ஒருபுறம் வைத்து உரசிய வேளை
சிரசில் பிடித்தது தீபல விகற்ப இன்னிசை வெண்பா .. தனிஅறை ஒன்றில் தவித்து இருக்க பணிகள் புரிய இனிய முகத்தாள் புறத்தில் எடுத்து உரசிய வேளை சிரசில் பிடித்தது தீ