இரவுபொழுதில் இல்லாத வானமென்ற ஒன்றில் சில நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன...
இரவுபொழுதில்
இல்லாத வானமென்ற ஒன்றில்
சில நட்சத்திரங்கள் ஒளிர்கின்றன
சில நட்சத்திரங்கள் ஒழிகின்றன
சில பெருசாகவும்-
சில சின்னதாகவும்-
சில இன்புறுத்தவும்-
சில துன்புறுத்தவும் -
நான் வழக்கம் போல
செவிடரின் காதை
இரவல் வாங்கி
அந்த வானத்தில் நீந்துகிறேன்...
சுசீந்திரன்.