திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புரட்டாசி கொடைசாற்றும் திருநாள் கெருடசேவை.. 04.10.2015....ஞாயிற்றுக்...
திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புரட்டாசி
கொடைசாற்றும் திருநாள் கெருடசேவை..
04.10.2015....ஞாயிற்றுக் கிழமை..காலை 10.00மணி
கிளரொளியிளமை* கெடுவதன் முன்னம்,*
வளரொளி மாயோன்* மருவிய கோயில்,*
வளரிளம் பொழில்சூழ்* மாலிருஞ்சோலை,*
தளர் விலராகிச்* சார்வதுசதிரே. 2.10.1
கிளர்ச்சியான இளமைப்பருவம் நம்மை விட்டு விலகுவதற்கு முன்பாகவே, ஒளிமிக்க மாயவன் எழுந்தருளியிருக்கும், இளம் சோலைகளால் சூழப்பட்ட திருமாலிருஞ்சோலை மலையை அடைந்து அவன் திருவடி பற்றுவதே நாம் தளர்வற்று உய்வதற்கு சாலச் சிறந்த வழியாகும்.