எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மைல்கல் ஆயிரம் கடந்து இருந்தாலும் ஒரு போதும் குறை...

மைல்கல் ஆயிரம் கடந்து இருந்தாலும் 

ஒரு போதும் குறை சொன்னது இல்லை 
என் மீது குறை பட்டதும் இல்லை
எதையும் என்னிடம் எதிர் பார்த்ததும் இல்லை
சோகம் பல வாழ்வில் வந்த போதும்
நேரில் சந்திக்கும் வாய்ப்புமில்லை
கண்ணீர் துடைக்க உன் கைகளும் இல்லை
அம்மாவாக தோழியாக உன் ஆறுதல்
வார்த்தைகள் மட்டும் இனணயம் வழியே 
வேறெந்த உறவுக்கும் இல்லை இவ்வளவு உரிமை
என்ன செய்து விட போகிறேன் உன் அன்புக்கு நிகராய்
காலமும் கடந்திட வேண்டும் 
முதுமையும் வந்திட வேண்டும்
நம் பாசமும் தொடர்ந்திட வேண்டும் 
இன்னும் ஈரேழு பிறவிக்கும் அக்க தங்கையாக .......


பதிவு : ஹசஅமதி
நாள் : 3-Oct-15, 12:59 am

மேலே