எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் இரண்டடிச் சொல் இனியவளாய் - உன் இமைகளில்...

உன் இரண்டடிச் சொல்

இனியவளாய் - உன்
இமைகளில் உலா வந்த - இவள்
இமை மூடித் திறக்கும் நொடிக்குள்
இன்னளாகி விட்டதடா உனக்குள்!

உயிரே - என நீ
அழைத்த போதெல்லாம்
என் உயிரையே உனக்கு
தர எண்ணினேன்....
அது தான் தீர்மானித்து விட்டாய்
என் உயிரையே குடித்து விட!!

'தங்கம்' என்று - உன்
உதடுகள் அழைக்க கேட்டு
தவம் கிடந்தேனடா - உன்னோடு
வாழும் வரம் வேண்டி......
அன்று புரியவில்லை - நீ
தனிமையில் எனை
தவிக்க விட்டு போவாய் என!!!

நான் இன்றி
உனக்கு எதிர்காலம்
இல்லை என்றே சொன்னாய் - இன்றோ
இறந்தகாலங்களும் - அர்த்தம்
இழந்து விட்டது;.......
''மறந்து விடு''
என்ற உன் இரண்டடி சொற்றொடரோடு!!!...

பதிவு : Shahmiya Hussain
நாள் : 22-Feb-14, 10:16 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே