காலை வணக்கம் .. என்னங்க, நாம மும்பைக்கு போகிற...
காலை வணக்கம் ..
என்னங்க, நாம மும்பைக்கு போகிற வண்டி இந்த பிளாட்ஃபாரத்தில தான் வருதுன்னு நல்லாத் தெரியுமா உங்களுக்கு ?
நல்லாத் தெரியும். வரும்போது அறிவுப்பு பலகையைப் பார்த்தேன். அதுலயும் இந்த பிளாட்ஃபாரத்தின் எண் தான் போட்டிருக்கு.
என்னமோ தெரியல்லைங்க. எனக்கு சந்தேகமா இருக்கு.
ஏன் அப்படி ஒரு சந்தேகம் ? ஒனக்கு எப்பவுமே எதிலேயும் ஒரு சந்தேகம் இருக்குமே.
இல்லீங்க. நம்ம ரெண்டு பேரைத் தவிர இங்கு வேறு யாருமே இல்லையே. ஒரு போர்டர் கூட கண்ணுல தெரியல்லே. அவங்களுக்குத் தான் எந்த வண்டி எந்த பிளாட்ஃபாரத்துல வரும்ன்னு தெரியும். அதோ பாருங்க அந்த பிளாட்ஃபாரத்துல கூட்டம் வழியறது.
ஓ .. அதுவா .. அந்த பிளாட்ஃபாரத்துலத்தான் வைஃபை சிக்னல் சீராக வரதாம். அதனால எல்லோரும் அங்கபோயி இருக்காங்க. நம்ம வண்டி பிளாட்ஃபாரத்தில வரும்போது பாரு .. எல்லாரும் தலை தெறிக்க ஓடிவருவாங்க.
News : Modi has promised WiFi in 500 Railway stations.