மனவெளியில் அழுத்தம் திரும்ப தொடர நினைத்தும் திரும்பவும் அதே...
மனவெளியில் அழுத்தம்
திரும்ப தொடர நினைத்தும்
திரும்பவும் அதே பாரம்
இறக்கி வைக்க சுமைதாங்கியை
தேடித் தேடி அலுத்தப்பின்
தூரத்தில் எழுத்து
வா...வந்து தொடு இளைப்பாரும்
உடனிருப்பாரும்
உன்னைப் போல் உண்டென
பட்டென்று பட்டதும்
தினமும் கொஞ்ச நேரம்
சுமையை இறக்கி
இடைவெளிக்கு விடை தந்து
மனவலியை குறைக்க
வந்திருக்கும்
எனக்குள் உறவாடும் தோழமையே தோள் கொடு