இன்று - பிரபல கவிஞர்களில் வ.ஐ .ச .ஜெயபாலன்...
இன்று - பிரபல கவிஞர்களில் வ.ஐ .ச .ஜெயபாலன் அவர்களின் கவிதைகள் வாசித்தேன்.....மனதை என்னமோ செய்தது.....அவரின் நடை நிச்சயமாக தமிழ்நாட்டில் நாம் தமிழ்தான் பேசுகிறோமா ...உண்மையில் தமிழை கடைப்பிடிக்கிறோமா என்று எண்ணத் தோன்றும் அளவில் அவரின் வார்த்தைப் பிரயோகங்கள் இலங்கைத் தமிழில் இனிய பாசுரமாக மனதை வருடிச் சென்றது......
அந்த வரிசையில் கனிமொழி என்று ஒருவர் இருந்தார் ......யாரிவர் 2 பதிவுகள் மட்டுமே உள்ளது....பிரபலமான கவிஞர் என்று போடப் பட்டுள்ளது .........
இதற்கு நம் தளத்திலே அழகாக எழுதும் எத்தனையோ பேர் மேல்.......அவங்க பேரைப் போடலாமே.....கவியும் கவி சார்ந்த தளத்திற்கும் நாடில்லை ...மொழி இல்லை ..மதமில்லை...அரசியல் சார்பு இல்லை.....தயவு செய்து இன்றைய தமிழ் இந்து நாளிதழில் கவிக்கோ திரு.அப்துல் ரஹ்மான் அவர்களின் தொடர் -முத்து குளிக்க வாரீங்களா - படித்து பாருங்கள்.....அத்துணை அழகாக சொல்லி இருப்பார்.உங்களுக்கே தெரியும் இதை ஏன் நான் பதிவிட்டேனென்று.....
-சுசீந்திரன்.....