எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

*************************** ****************************** நீங்களெல்லாம் யார்? கவிஞர்களா? எழுத்தாளர்களா? தெருவில்...

*************************** ****************************** 
நீங்களெல்லாம் யார்?
கவிஞர்களா?
எழுத்தாளர்களா?
தெருவில் போகும் வெற்று நபர்களா?
*********************************************************

நண்பர்களே ...!
இத் தளத்தில் நம்மோடு பயணித்த ராஜமாணிக்கம் ஐயாவை இத் தளத்திலிருந்து நீக்கி விட்டார்கள்.
('எங்களோடு ஒன்றும் பயணிக்கவில்லை' என்று உங்களுள் சிலர் சொல்வது கேட்கத்தான் செய்கிறது.)  
பரவாயில்லை.

நண்பனென்ற முறையில், அவரை நீக்கியதற்கான காரணத்தைக் கேட்பதை நான் என் கடமையாகக் கருதுகிறேன்.
அவர் மீது யாரும் புகார் செய்துள்ளார்களா ?
அவர் யாரையாவது மரியாதைக் குறைவாகப் பேசினாரா?
அல்லது, யாரையாவது வம்பு தும்புக்கு இழுத்தாரா?
அல்லது, பெண்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டாரா? பேசினாரா?
பிறகு எதற்கு அவரை நீக்கினீர்கள்?

எனக்குத் தெரிந்து அவர் நீக்கப் பட்டதற்கு ஒரே காரணம், தனிப்பட்ட ஒரு மனிதரின் சொந்த விருப்பு வெறுப்பே.
அந்த வெறுப்பு எப்படி வளர்ந்தது என்பதை ஒவ்வொன்றாய்க் காணலாம்.  

சமீபத்தில் ஹியாக்ஸ் நிறுவனம் நடத்திய கவிதைப் போட்டிக்கான அறிவிப்பைப் பாருங்கள்.
முதலில், 'வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு ரூ. ----- பரிசு' என்று சொல்லியிருப்பார்கள் போல.
ஒரு நண்பர், 'அதிர்ஷ்டசாலிக்கா? அப்படியானால் கவிதையைக் குலுக்கித்தான் தேர்ந்தேடுப்பீர்களா?' என்று கேட்டிருக்கிறார்.
உடனே அதை, 'வெற்றி பெறும் நபருக்கு' என்று மாற்றி விட்டார்கள்.    
நான் பிடித்துக் கொண்டேன்.

'வெற்றி பெறும் 'நபருக்கா'?
ஏனம்மா, வெற்றி பெறும் 'கவிஞர்க்கு' என்று எழுதத் தோன்றவில்லையா?
முதலாளி ராஜேஷ் குமார் இதையெல்லாம் கவனிக்க மாட்டாரா?' என்று கருத்துப் பதிந்திருந்தேன்.

அப்படியும் அறிவிப்பை எழுதியவர் அதை மாற்றவில்லை.
இதில் ஒரு விஷயம் என்னவென்றால், அவ்வறிவிப்பை எழுதியவர்  சில வாரங்களுக்கு முன்புதான், தானே விரும்பி ராஜமாணிக்கம் ஐயாவிற்கு நட்பு விண்ணப்பம் அனுப்பியிருந்தார்.   
அந்தத் தோழமை உணர்வில், ஐயாவும் அந் நண்பருக்குத் தனியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பி, நபரைக் கவிஞராக மாற்றக் கோரியிருந்தார்.
அது போக, இத் தளத்திற்கே அச்சாணி போல் விளங்கும் ஒரு பெரியவரிடமும் ஐயா இவ் விசயத்தைக் கொண்டு போனார்.

இவ்வளவிற்குப் பிறகும், அவர் தன் அறிவிப்பில் எந்த மாறுதலையும் செய்யவில்லை.
அவ்வறிவிப்பு, உங்களையும் என்னையும் நபர் என்றே சுட்டிக் கொண்டிருக்கிறது இன்னும்.

ஆமாம், நீங்கள் கவிஞரில்லை!
எழுத்தாளர் இல்லை!
யாரோ ஒரு நபர்!

அதுவும் யாருக்கு..?
சாட்சாத் இந்தத் தளத்திற்குத்தானையா!

எந்தத் தளத்திற்குத் தினமும் நீங்கள் இரண்டு மூன்று மணி நேரம் செலவழிக்கிறீர்களோ, அந்தத் தளம்தான் சொல்கிறது, நீங்கள் யாரோ ஒரு நபராம்!
தவறு;
தளம் சொல்லவில்லை!
தளத்தின் சார்பாக இயங்குபவர் சொல்கிறார்!
உண்ணும் போதும், உறங்கும் போதும், குளிக்கும் போதும், நடக்கும் போதும்,காலையில் நான்கு வரி, மதியம் நான்கு வரி, மாலையில் நான்கு வரி என்று எண்ணி எண்ணிச் சிந்தித்து, வீடு வந்ததும், எந்தத் தளத்தில் கதையென்றும், கவிதைஎன்றும் எழுதிஎழுதிக் கொட்டுகிறீர்களோ, அந்தத் தளத்தின் பிரதிநிதி சொல்கிறார், நீங்கள் யாரோ ஒரு நபராம்!

சரி, அந்த யாரோ ஒருவர் யார் தெரியுமா...?

(அடுத்துச் சொல்கிறேன் ...!)

****************************************************** ************************************************************************ ******************************************
 

பதிவு : டோனி கிறிஸ்டோபர்
நாள் : 30-Nov-15, 2:07 am

மேலே