எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனியாவது நாம யோசிக்கணும்.... இனி ஓட்டுக்கு காசு வேண்டாம்..தண்ணீ...

இனியாவது நாம யோசிக்கணும்.... இனி ஓட்டுக்கு காசு வேண்டாம்..தண்ணீ தேங்காம இருக்க வழி பண்ணுங்கனு சொல்வோம்...இலவசமா ஏதும் வேண்டாம்...ஏரிகளை தூர் வாருங்கனு சொல்வோம்.....ஆள பிடிச்சு லஞ்சம் குடுத்து கவர் மெண்டு வேலை வாங்கறது இருக்கட்டும்...ஆத்துல மணல் அல்ல கூடாதுன்னு சொல்லுவோம்...அடுக்குமாடி வீடு கனவா இருக்கலாம்.. அதுக்காக ஏரி இருந்த இடத்துல எவனோ ஒரு வியாபாரி டை கட்டிக்கிட்டு சொல்றாங்கறதுக்காக மிச்சம் இருக்கற 50 வருசத்துக்கு லோன போட்டு வாங்கி சொந்த ஊர்க்காரங்ககிட்ட பீத்திக்காம இருப்போம்....மேல்தட்டும்.. நடுத்தரமும் பண்ற தப்பு... அடிமட்டத்துல இருக்கவறன் வீட்டைத்தான் முதல்ல புடுங்குது.... விதி... இங்கே விதிங்கறது செஞ்ச பிழையோட எதிர்வினை....அட இவ்ளோ நடக்குதே.. இந்த கடவுளர்கள் எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க... வந்து ஏதாவது பண்ணுங்கப்பா.... உடனே... அவுங்க இருக்கவும் தான் இந்தளவுக்காவது இருக்குதுன்னு யாரும் சொல்லிடாதிங்க...லூசு மாதிரி..... 


விதைத்தது விளையும்.... அது தான் பரிணாமத்தின் சூட்சுமம்....

கவிஜி 

பதிவு : கவிஜி
நாள் : 2-Dec-15, 2:41 pm

மேலே