எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

டீக் கடை பெஞ்சு காரோட்டம் காணாமல் காணுமிடம் யாவும்...

டீக் கடை பெஞ்சு


காரோட்டம் காணாமல் காணுமிடம் யாவும்
நீரோட்டம் தோன்றாமல் நீர்த்துப் போகும்
ஏரோட்டம் நிற்கும் ஏங்கும் நெஞ்சங்காள்
பாரோட்டம் ஏதிங்கு பஞ்சம் ஆடுமே.!


தருநிழல் வேண்டி தேடுவார் வெம்மையில்
ஒருகுடம் நீரின்றி ஓடுவார் உண்மையில்
திருமழை பொழிய தினம்யாகம் செய்வார்
தருவதை வதைக்காது தழைக்கவிட்டா லேதீருமே.!!


அட்டமும் நவமியும் கூட்டவே அட்டமே
விட்டமும் ஆரமும் சேரவே வட்டமே
திட்டலும் வணங்கலும் தேவருக்கு இட்டமே
கட்டமே காசிலாகா சினிவாழ்வு மட்டமே.


அய்யா இதைக்கேளு ஆன்றோர் சொன்னாரே
கொய்யாவும் நாவலுமே நீரழிவுக்கு மருந்தாமே
ஒய்யார கூந்தலாளே ! ஒருநோயும் அண்டாதே
ஐயமேது அருந்தியது அற்றபின்அடி சில்கொள்ளவே !!!!


காரோட்டம்=மேகவோட்டம் ,
பார்=உலகம் ,
தரு=மரம்,
அட்டம்=8,
நவமி=9,
9+8=17(கூட்ட)=1+7=8 ,
காசினி=உலகம்.
கட்டமே= துன்பமே
அடிசில்=உணவு
காசிலா=காசு+இலா =பணமற்ற
தேவர்=தெய்வங்கள்

சுசீந்திரன்.

நாள் : 9-Dec-15, 10:00 pm

மேலே