ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள்....
ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள். மனைவியின் சம்பளத்தை அப்படியே கணவனிடம் கொடுத்துவிடுவாள். இப்போதுதான் வீடு கட்டியதால் கடனை சிறிது சிறிதாக அடைத்து வந்தார்கள்.
ஒவ்வொரு செலவுக்கும் அவள் கணவனிடம் கேட்டே வாங்கிக்கொள்வாள். கணவன் வெளியே சென்றிருந்த சமயம் குழந்தைக்கு மருந்து வாங்க ஒரு நாள் காசு கேட்ட போது பக்கத்துக்கு வீட்டில் வங்கி போக சொன்னான். அங்கு கேட்டும் கிடைக்கவில்லை. வீட்டில் பீரோவில் காசு இருக்கும் போது எடுத்திட்டு போய் வாங்கி வா என்று அவன் சொல்லவில்லை.
வீட்டில் இருக்கும் காசை எடுத்திட்டு போய் வாங்கி வர அவன் அனுமதிக்கவில்லை என்றால் நம்மை அவன் நம்பவில்லை. காசை எடுத்து மனைவி செலவு செய்து விடுவாள் என்று என்னினானா. அவள் மிகவும் மனம் வேதனை பட்டு அவனிடம் கேட்ட போது, நான் அப்படித்தான், உன் மனசு கஷ்டபடரத பத்தி எனக்கு கவலை இல்லை என்றான். அவன் மன நிலை பற்றிய உங்கள் கருத்து என்ன?