எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயேசு கிறிஸ்து . கன்னி மரியாளின் கருவறையில் வந்த...

இயேசு கிறிஸ்து .

கன்னி மரியாளின் கருவறையில் வந்த தேவன்  
கஷ்டப்படும்   ஜீவனை   காக்க வந்த நல்ல மேய்ப்பன்
சிலுவையில் அறைபட்டபோது சிந்தியது அவரது ரத்தமே 

சிதறிய ரத்தத்தில் நமது   பாவங்கள் பெற்றது பரிசுத்தமே


கர்த்தர் என்று சொன்னால் கடின   கஷ்டங்கள் தீரும்

காயம் பட்ட நெஞ்சங்கள் இளைப்பாறுதல் கொள்ளும்

ஆவிகளும் பாவிகளும் அவரண்டை வருவரே  
அன்பு நேயப் பார்வையிலே மனம் திருந்தி செல்வரே  



முடவனை நடக்க வைத்து பார்த்த அதிசயம்

மண்ஜாடிநீரை திராட்சை ரசமாக்கிய அதிசயம்

கடல் மீது நடந்து வந்து காட்சி கொடுத்த அதிசயம்

பொங்கிய  கடலையே  புன்னகையில்  பணியவைத்த அதிசயம்



அராஜகம்நடந்துவந்தஆலயத்தைஇடிப்பேனென்றார்

அதையே மூன்று நாளில்  அப்படியே   எழுப்புவேனென்றார்

மரித்தாலும் நான் மரியேன் மீண்டும்  வருவேனென்றார்

மரியாளின் மகன் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்



தொழு நோயில் தவழ்ந்தவனை தொட்டு தூக்கினார்

தெருவோரத்  தாசிக்கு  அவள்  பாவம் போக்கினார்

பாவத்தின் சம்பளம் மரணமென்று  பலமுறை  போதித்தார்

பாவிகளையும் ரட்சிக்க சொல்லிக் கொடுத்து போனார்



பாவங்கள் போக்க வந்த  இயேசு பாலகர்

பாரினில் பாதிபேர் போற்றுகின்ற உலக  நாயகர்

கதை சொல்லி போதனைகள் ஆயிரம் செய்தார்

கல்லடியும் கசையடியும் வாங்கி வலிகள்  பெற்றார்



 
வானம் மண்ணும் போற்றும் தேவ தூதுவர்
இவரல்லவா 
வாடுகின்ற மனிதர்க்குநல்ல மேய்ப்பர்  இவர் ஒருவரல்லவா 


வருத்தப் பட்டு பாரம் சுமப்பவர்
இவரிடம்  வருவர்

கருணையே உருவான கர்த்தர்  கைதூக்கி விடுபவர் .


அந்த -

கர்த்தருக்கு தோத்திரம்

தேவ குமாரருக்கு தோத்திரம்

மேய்ப்பருக்கு தோத்திரம்

இயேசு கிறித்துவுக்கு தோத்திரம்.


சுசீந்திரன் .


நாள் : 18-Dec-15, 10:17 am

மேலே