காற்றின் விலை எவ்வளவு? என்னடா இவன் இப்படி ஒரு...
காற்றின் விலை எவ்வளவு?
என்னடா இவன் இப்படி ஒரு கேள்விய
கேக்குறான்னுதானே யோசிக்கிரீங்க,
காற்றிற்கும் விலை உண்டு
ஆம் காற்றின் இன்றியமையாமையை சொல்லித் தெரிய
வேண்டிய அவசியம் இல்லை ஆனால் வருங்காலத்தில்
காற்றிற்கும் விலை கொடுக்க வேண்டிய நிலை வரும்
தற்போது தண்ணீர் பாக்கேட் வாங்கி அருந்துகின்றோம்
அதே போல் காற்று பாக்கேட் வாங்கி சுவாசிக்கும் நிலை
ஏற்பட்டால் என்ன ஆகும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்
இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னனா
மரத்தை வெட்டாதீர்கள், பெட்ரோல் மற்றும் டீசல்
வாகனத்தின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்
தூய்மையான காற்றை பெறுங்கள்
எதிர்காலத்தலைமுறையினருக்கு உதவி செய்திடுங்கள்
இவை எல்லாம் நாம் ஒன்றும் சும்மா செய்யவில்லை
தூய்மையான காற்றை பெற்றதுக்கு நாம் கொடுக்கும்
விலை
~~~மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்~~~