எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெரியாரின் 42-ம் ஆண்டு நினைவு நாள்: திராவிடர் கழகம்...

பெரியாரின் 42-ம் ஆண்டு நினைவு நாள்: திராவிடர் கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம், அமைதி ஊர்வலம்




சென்னை, 

பெரியாரின்
42-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் இலவச
மருத்துவ முகாம், அமைதி ஊர்வலம் ஆகியவை நடைபெறுகிறது. 

இதுகுறித்து, திராவிடர் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

இலவச மருத்துவ முகாம்

தந்தை
பெரியாரின் 42-ம் ஆண்டு நினைவு நாளான 24-12-2015 அன்று திராவிடர் கழகம்,
பகுத்தறிவாளர் கழகம் ஆகியவற்றின் சார்பில் நாடெங்கிலும் பல்வேறு சமூக
மக்கள் நலச் சேவைகள் செய்யப்படுகின்றன. 

திராவிடர் கழகத்தின்
தலைமையகமான சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார்
- மணியம்மை மருத்துவமனையில் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இலவச
பொது மருத்துவ முகாம், விழிக்கொடை, குருதிக் கொடை, உடற்கொடை ஆகியவை
நடைபெறவுள்ளன. 

அமைதி ஊர்வலம்

திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணி தலைமையில் காலை 9 மணியளவில் சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில்
உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அங்கிருந்து பெரியார்
திடல் நோக்கி அமைதி ஊர்வலம் நடைபெறும். 

காலை 10 மணியளவில் பெரியார்
ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மை சிலைக்கு மாலை
அணிவிக்கப்பட்டு, பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை
அணிவிக்கப்பட்டு தந்தை பெரியார், அன்னை மணியம்மை நினைவிடங்களில் மலர்வளையம்
வைக்கப்பட்டு உறுதி மொழி ஏற்கப்படும். 

சிறப்புக் கூட்டம்

மாலை
6.30 மணியளவில் பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில்
தந்தை பெரியார் 42-ம் ஆண்டு நினைவுநாள் சிறப்புக்கூட்டம் திராவிடர் கழகத்
துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர்
வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்ற வக்கீல் சு.குமாரதேவன் அறிமுக உரை
ஆற்றுகிறார். 

பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பேராசிரியர்
அ.மார்க்ஸ் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். நிறைவாக ‘‘தந்தை பெரியார் ஒரு
சுயமரியாதை விஞ்ஞானி’’ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
உரையாற்ற உள்ளார்.

நாள் : 24-Dec-15, 5:10 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே