நண்பர்களே குடிநீர் வேண்டுமா? குளிர்பானம் வேண்டுமா? நமக்கு மட்டும்...
நண்பர்களே
குடிநீர் வேண்டுமா? குளிர்பானம் வேண்டுமா?
நமக்கு மட்டும் பஞ்சம் வருகிறது. குளிர்பானம் தயாரிக்கும் ஆலைகளுக்கு மட்டும் பஞ்சம் வரவில்லையே ஏன்?
நம் மண்ணில் உள்ள தண்ணீரை உறிஞ்சி அதை நமக்கே விற்பனை செய்கிறார்கள். ஆனால் நாம் குடிநீர் கேட்டு போராடுகிறோம். குளிர்பானம் குடித்துவிட்டு குடிநீர் கேட்டு போராட என்ன உரிமை இருக்கிறது நமக்கு?
இந்த ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகளால் நம் மண்ணும் மலடாகி, தண்ணீரும் விஷமாகிறது. திருச்சி, சூரியூரில் சட்ட விரோதமாக அமைந்துள்ள குளிர்பானம் தயாரிக்கும் பெப்சி(PEPSI) ஆலையினால் ஏற்படும் தீமைகளை கிராமங்கள் தோறும் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு பயணம் தொடங்கவுள்ளோம். இயற்கையின் மீதும் தண்ணீரின் மீதும் ஆர்வமுள்ள அனைவரும் இணைந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.(வாழ்த்துக்கள் சொல்வதை தவிர்க்கவும்)
நாள்:09-03-2014
நேரம்: காலை 9.00 மணி
இடம்: சூரியூர், திருச்சி (பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்புறம்)
ஒருங்கிணைப்பு
தண்ணீர் அமைப்பு
9500189319
www.thanneer.org