எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வானவில்லுக்கு வர்ணம் எட்டு... பாலப்பருவ நாட்காட்டியின் கடைசித்தாளும் கிழிக்கப்பட்டது...

வானவில்லுக்கு வர்ணம் எட்டு...

பாலப்பருவ   நாட்காட்டியின்
 கடைசித்தாளும்   கிழிக்கப்பட்டது
என்   கார்மோன்   தேசத்தின் 
புத்தாண்டு   நீ.....

என்காதலியென்று   சொல்வதைவிட
 என்னை ஆதரி என்பதில்தான் 
ஏகப்பட்ட   
தினங்கள் கழிந்தது ....

புல்லின் நுனியில் கண்ட
பனித்துளி பரவசத்தை
உன் புன்னகை  கீற்றில்  
பின்னர்  கண்டேன் ....

அலையலையாய்  அழைப்புகளை
அனுப்பிய
உன் கண்ணெனும் சமுத்திரத்தில்
கரை மணலாகி கரைந்து போகிறேன்....

பாராத பொழுதுகளில்
வாலறுந்த குருவிபோல
நூலறுந்த பட்டமாகி
பாலருந்த தாயின்றி
பசலைப்படும் சேயாகிறேன்...

வானவில் ஏழு வண்ணத்திற்கும் 
அடங்காத எட்டா வண்ணம் நீ
எட்டாவது வண்ணம் நீ ......

நீநடந்த பாதையிலே நானடந்து
உன் பாதச் சுவட்டுக்கு
கொலுசு மாட்டி விட்டவனை அறியாயோ 

நீ நீராடும் துறைக்கு வருவதற்குமுன்  
நான்வந்து   உன் முகத்துக்கு   பூச 
மஞ்சள் அரைத்துவிட்டு
போனதையும்  மறந்தாயோ  .....

இங்கே   துடிக்கும் உன்னிதயம் நலமே
அங்கே துடிக்கும்  என்னிதயம்    நலமா
காற்றை தூதாக்கி கடிதம் போட்டேன் 
கையில் இருக்கும் அலைபேசியின் 
கதிர்வீச்சும் உன்னிதயத்தை  
காயபடுத்தும் என்பதால்
அதை தூக்கிப்போட்டேன் .....

தொடரும்......

சுசீந்திரன்.

நாள் : 28-Dec-15, 9:23 pm

மேலே