படித்த செய்தி; இன்று அன்று | 8 ஜனவரி...
படித்த செய்தி;
இன்று அன்று | 8 ஜனவரி 1964: புத்தகம் செய்த புரட்சி! · பணக்கார நாடான அமெரிக்காவிலும் வறுமைப் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் பலர் இருக்கிறார்கள் என்று உலகுக்கு அறிவித்தது, 1962-ல் வெளியான ‘தி அதர் அமெரிக்கா’ புத்தகம்.இதன் தாக்கத்தால் பொருளாதார வாய்ப்புச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி அமெரிக்காவின் சிவில் உரிமைப் போராளிகள் போராட்டத்தில் இறங்கினர்.இதையடுத்து, ‘வறுமைக்கு எதிரான போரை’ 1964 ஜனவரி 8-ல் அறிவித்தார் அதிபர் லிண்டன் ஜான்சன். முதல் கட்டமாக கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவச் சேவைகளை மக்களுக்குப் பரவலாக்க அன்றைய மதிப்பில் 100 கோடி டாலர்கள் ஒதுக்கப்பட்டன.இளைஞர்களுக்கு உடனடியாக வேலை கொடுக்கப்பட்டது. ஏழைக் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து இடைநிற்காமல் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டது. 50 ஆண்டுகள் கழித்து இன்று அமெரிக்காவின் வறுமை நிலை 26%-ல் இருந்து 16% ஆகக் குறைந்திருப்பதைப் பார்க்கும்போது புத்தகத்தின் வலிமை புரிகிறது!
புத்தகம் செய்த புரட்சி!, ‘தி அதர் அமெரிக்கா’, புத்தகம்.