எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொங்கல் நன்னாளில் இனிய சர்கரைப் பொங்கல் தயாரிப்பது எப்படி...



                    பொங்கல் நன்னாளில் இனிய சர்கரைப் பொங்கல் தயாரிப்பது எப்படி பார்ப்போமா 
                     வாருங்கள் அன்பு வாசகர்களே !
  
                      தேவையான உபகரணம், பொருட்கள் :

                       1.கிராமபுரத்தில் செங்கல் கொண்டு அமைத்த புதிய அடுப்பு ; நன்று காய்ந்த விறகு 
                       2. அடுப்பை சுட்டப்படுத்த ; கோலம் போடவும் 

                       3. புதுப்பானை  நன்றாக நீர்கொண்டு சுத்தம் செய்தப்பின் பானையின் வாயை ,மஞ்சள் இலையோடு கூடிய கொத்தால் அலங்கரிக்க .

                         4. கிராமம் இல்லாத பெரிய ஊர்களில் ,வீட்டில் காஸ் அடுப்பை சுத்தம் செய்து அதன் கீழ் 

                               கோலம் இடவும் ; அடுப்பின் சுத்தம் செய்யப்பட்ட வெண்கல பாத்திரத்தை அலங்கரித்து 
       
                                தயாராக வைக்கவும் .

   தயாரிப்பு :

                                  தேவையான சாமான்கள் : 

                                   1.பச்சரிசி தேவையான அளவு 

                                   2.பாசிப் பருப்பு அரிசி அளவிற்கு 1/4 பங்கு 

                                    3.பாகு வெல்லம் தேவைக்கேற்ப :


                     தயாரிப்பு : அடுப்பை மூட்டி, ஒரு பங்கு அரிசி அதன் கால் பங்கு பாசிபருப்பை 
                      எடுத்துகொண்டு  தனித்தனியாக வாணலியில் இட்டு வருத்துகொள்ளவும் 

                     வேறொரு பாத்திரத்தில் தேவையான அளவு பாகு வெல்லம் இட்டு (அதாவது ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு அளவு வெல்லம் ), தண்ணீர் சேர்த்து அடுப்பில் இட்டு கொதிக்கவிடவும் அதை

                        பாகாக மாற்றி, வடிக்கட்டி வைத்துகொள்ளவும் 
  
                        இப்போது வெண்கலப் பாத்திரத்தில் உள்ள அரிசி  -பருப்பு கலவையை ,ஒரு பங்கு அரிசி

                        -பருப்பு கலவைக்கு இரண்டு மடங்கு நீர், ஒரு பங்கு பால் சேர்த்து வேக விடவும் 

                          கலவை பொங்கி வரும்போது ,வெல்லப்பாகை சேர்த்து கொதிக்க விடவும் ; கலவை 

                          கொதித்து அரிசி=பருப்பு வெந்த நிலையில் அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி 

                           வைக்க. இப்போது அடுப்பை மீண்டும் மூட்டி, சிறிய வாணலி ஏற்றி அதில் 50 கிராம் நெய் 

                           விட்டு அதில் உடைத்த முந்திரி, திராக்ஷை பொறித்து பொங்கிய கலவையில் சேர்க்க.

                            பாத்திரத்தை அடுப்பில் இருண்டு இறக்கும் போது, போடி செய்த ஏலக்காய், லவங்கம்,

    ரைப்போங்கள்      குங்குமப்பூ, துருவிய ஜாதிக்காய்சேர்த்து இறக்கி பின் வெறும் நெய் 2 தேக்கரண்டி சேர்த்து 

                    கலவையை இறக்கவும்.

                    இதோ கம கமக்கும் தேவரும் விரும்பி ஏற்கும் அறுசுவை சர்கரைப்பொங்கல்

                    பொஇங்கலொ பொங்கல் ; ஆண்டவனுக்கு படைத்தது  அவரும் பகிர்ந்து உண்ணவும் 




நாள் : 16-Jan-16, 9:01 pm

மேலே