எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்க வீட்டு (செல்லப்) பிள்ளை அவன் என் உறவுக்காரன்...

எங்க வீட்டு (செல்லப்) பிள்ளை 


அவன் என் உறவுக்காரன் 
வயல்வெளிக்கு சொந்தக்காரன்
என் வீட்டிற்கு 
வாயில்லா மூத்தப்பிள்ளை 
அவனுக்கும் எனக்கும் 
சில ஒற்றுமை உண்டு
இவனுக்கும் கண்ணீர் வரும்
அவனுக்கும் கண்ணீர் வரும்
அவனுக்கும் வால் உண்டு 
இவனுக்கும் வால்த்தனம் உண்டு 
இவன் அவனுக்கு கொடுத்ததோ 
வெறும் பசும்புல்லு…!
அவன் இவனுக்கு கொடுத்ததோ 
இரண்டாம் தாய்ப்பாலு…!

நாள் : 17-Jan-16, 10:15 am

மேலே