காலத்தை வெல்ல நானறியேன்,காலம் என்னை வென்றாலும் அதை நான்...
காலத்தை வெல்ல நானறியேன்,காலம் என்னை வென்றாலும் அதை நான் கண்டுகொள்ளேன், துணிவே துணையென எண்ணி கருமம் ஆற்றுவேன், கடலில் அது என்னை தள்ளினாலும்!
கனவுப்பட்டறையில் காலத்தை கழிப்பேன் எனும் துணிவோடு நானிருக்கிறேன், துணையென யாரும் வேண்டா, தூக்கம் மட்டுமே போதும் நான் விழிமூடும்போது மட்டும்!
காற்றினில் அசைந்திடும் இலைகளை போலே, கனவினில் அவள் இமைகளின் அசைவை நான் கண்டு ரசித்தேன், கொண்டு சென்றாள் அனைத்தையும் விடிந்ததும் இமைகளை மூடி!