ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 2 ============================== எழுத்து...
ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 2
==============================
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...
இதன் முதல் இரு இடங்களில் எழுத போகும் அந்த இரு ஜாம்பவான்கள் யாரென்று தெரியனுமா?
அகர முதல எழுத்தெல்லாம்
என்ற திருக்குறளை போலவும்
ஆத்திச் சூடி போலவும் (அ ஆ)
என்ற எழுத்தில் ஆரம்பமாகும் இருவர் முதல் இரு இடங்களில் எழுத போகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....
மீதி உள்ளவர்களின் பட்டியலை அடுத்த எண்ணத்தில் தெரிவிக்கிறேன்...
இந்த தொடருக்கான விதி முறைகள்:
*****************************************
- ஹைக்கூ இலக்கணம் மீறாமல் இருக்க வேண்டும்...
- ஹைக்கூ இலக்கணம் இல்லாமல் எழுதும் எந்த படைப்பும் அடுத்த கட்ட நகர்த்தலுக்கு எடுத்துக் கொள்ள மாட்டாது...
- மூன்று வரிகள் என்ற கோட்பாட்டிற்குள் ஹைக்கூ இருத்தல் வேண்டும் மற்றும் தொடரின் பெயரை தவிர வேறு பெயர்கள் தங்கள் படைப்பில் பதிவிட கூடாது.
- 30 வரிகளுக்கு மேல் கவிதை இருத்தல் கூடாது. ஒவ்வொரு பத்தியும் மூன்று வரிகளுக்கு மேல் இருக்கவும் கூடாது.
- அவரவர்களுக்கு கொடுத்த தேதியில் பதிய வேண்டும். தேதியை தவற விடுபவர்களுக்கு வேறு தேதி ஒதுக்கப் பட மாட்டாது.
- ஒருவேளை பதிவிட முடியாதவர்கள் இரு நாளைக்கு முன்னமே எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்து விட வேண்டும். அப்படி முறை படி தெரிவிக்காதவர்கள் அடுத்தடுத்த தொடர்களில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
- படைப்பை பதிவிடுபவர்கள் கண்டிப்பாக அந்த தேதியில் காலை 9 மணிக்கு முன் பதிவிட வேண்டும்.
- படைப்பு தங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
- மொழி பெயர்ப்பு /பிறர் கவிதைகளின் தழுவலோ இருக்க கூடாது.
- ஒன்றிற்கு மேல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வழங்க பட மாட்டாது. அதே போல இந்த தொடரில் எழுதும் படைப்பாளிகள் இதே தொடர் பெயரில் வேறு படைப்புகளை பதிவிட கூடாது...
அடுத்த எண்ணத்தில் எழுத போகும் தோழர் தோழமைகளின் பட்டியலும் தொடருக்கான தலைப்பும் அறிவிக்கப் படும்...
வாழ்த்துக்கள் அனைவருக்கும்...
வளர்வோம் வளர்ப்போம்.
நட்புடன்,
ஜின்னா.