படித்த செய்தி அழகிய தமிழ் ‘ஸ்மார்ட் சிட்டி’ என்று...
படித்த செய்தி
அழகிய தமிழ்
‘ஸ்மார்ட் சிட்டி’ என்று சொல்லிப் பழகிய நமக்கு ‘பொலிவுறு நகரம்’ என்று அழகிய தமிழில் முதலில் சொல்லிய ‘தி இந்து’வுக்கு நன்றி. பொலிவுறு நகரத்துக்கான அடிப்படைத் தேவைகளைத் தலையங்கம் எடுத்துரைத்தது சிறப்பு. பலரும் ஒரு நகரின் முக்கியத் தேவையாகக் கணினி, அதிவேக இணையம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி, அடிப்படை வசதிகள், சுகாதாரம்தான் ஒரு பொலிவுறு நகரத்துக்குப் பொலிவு சேர்க்கும் என்பது நிதர்சனம்.- எம். விக்னேஷ், மதுரை.