எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று தமிழ் மொழியை வளர்க்காமல் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் பல...

இன்று தமிழ் மொழியை வளர்க்காமல் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் பல தமிழக தொலைகாட்சிகளின்
நடுவிலே ஒரு அயல் நாட்டு தொலைக்காட்சி தமிழ்
மொழியை அதன் அடிநுனியில் இருந்து மீட்டெடுத்துக்
கொண்டிருக்கிறது.

இந்த தொலைக்காட்சியை பார்த்து மற்ற அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளும் வெட்கி தலை குனிய வேண்டும்.ஆம் இந்த டிஸ்கவெரி தமிழ் தொலைக்காட்சி நாம் இழந்த,பழக்கத்தில் இல்லாத பல அரிய சொற்களை அறிவியல் தமிழில் மிக நேர்த்தியாக நம் மக்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

இவர்களின் தமிழ் சொல்லாடல் நம்மை வியக்க வைக்கிறது. ஒளிக்கோபுரம், சதுப்பு நிலங்கள், தாழ்
நிலங்கள், அகழ்வு உந்து, சம ஈர்ப்பு விசைகள், மின் ஆற்றல்கள், என பல அருமையான தமிழ் மொழி பெயர்ப்புகள். ஆங்கிலமும் தமிழும் கலந்து கலந்து நம்மை எரிச்சல் உண்டாக்கும் தமிழ்
தொலைக்காட்சிகளுக்கு நடுவில் இந்த அலைவரிசை நமக்கு தேனமுது .

இவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துவதோடு நம் குழந்தைகள், குடும்பத்தினர் அனைவரையும் இந்த தொலைக்காட்சியை பார்க்கச் செய்து அறிவியலையும் தமிழையும் ஒருங்கே கற்போம் கற்பிப்போம்.

இதை உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள்!!!

தமிழை கொலையாய் கொல்லும் மற்ற தமிழ் தொலைகாட்சிகள் தூக்கில் தொங்கலாம்!

நாள் : 9-Mar-14, 4:28 pm

மேலே