இன்று கிணத்தகடவு சென்று வந்தேன் . உடன் கவிஜியும்...
இன்று கிணத்தகடவு சென்று வந்தேன் . உடன் கவிஜியும் , சேகுவாரா கோபியும்.
தோழர் அபியின் ஆதலினால் காதலித்தேன் நூல் மறுவாசிப்பும் , விசாரணை படத்தின் மூலகதை எழுதிய தோழர் சந்திரகுமாருடன் ஓர் கலந்துரையாடலும் என் விழா அமைந்திருந்தது.
காதல் மணம் புரிந்து சாதனை செய்த அபியின் மண பதிவுக்கு ஒப்பமிட்டவர் சந்திரகுமார் . நூலாக்கியவன் நான் . இன்று காதலர் நாள் . எல்லாம் பொருந்தி வந்தது.
அபியின் நாவல் அல்ல அந்த நூல் : அவர் வாழ்க்கை.
விசாரணை ஒரு படக்கதை அல்ல : அது சந்திரகுமாரின் நிஜ வாதை.
நிஜங்கள் இரண்டும் நிழலாகி பதிவாகின.
நீண்ட நேரம் விழாவில் இருந்திட இயலா சூழலில் உழைப்பாளன் பானம் அருந்தி விடைப்பெற்றோம் .