எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மருத்துவத்துறை சீரியஸானஒரு துறை என்றாலும் ஈடுபடுபவர்களைப் பொறுத்து நகைச்சுவைக்கும்...

மருத்துவத்துறை சீரியஸானஒரு துறை என்றாலும் ஈடுபடுபவர்களைப் பொறுத்து நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது.ஒரு இளம்பெண் காதல் தோல்வியில்பேகான் பெய்ட் குடித்து அட்மிட் ஆனாள். அவளை வென்டிலேட்டரில் போட்டு செயற்கை சுவாசமளித்துசெமத்தியாக மெனக்கெட்டோம். ஒரு வழியாக அவள் நார்மலானதும் வார்டுக்கு மாற்றினோம். பொதுவாகஇம்மாதிரி ஆட்களுக்கு மனநல வைத்தியரைக் கொண்டு ஒரு கவுன்சிலிங் கொடுத்து அனுப்புவோம்.மனநல வைத்தியரிடம் ஒரு பாய்சன் கேஸ் என்று மட்டும் சொல்லியிருந்தோம். என்ன பாய்சன் என்று சொல்லவில்லை. சைக்கியாட்ரிஸ்ட் அதிகாலை ஆறரை மணிக்கே வந்து விட்டார். அந்த இளம்பெண்  அந்த நேரத்தில் எங்கள் மருத்துவமனை காண்டீன் காபியை மட்டும் சாப்பிட்டிருந்தாள். ஆச்சா..


இப்போது அவர்களுக்குள்நடந்த உரையாடல்:

டாக்டர்:  என்னம்மா சாப்பிட்டே?

இளம்பெண்: காண்டீன் காபிசார்..

டாக்டர்: காபி சாப்பிட்டதுக்கா வென்டிலேட்டர்ல போட்டாங்க? அவ்வளவு மோசமாயிடுச்சா காண்டீன் காபி? யாரும்மா காண்ட்ராக்டர்?

நர்ஸ் : சார், அது மூட்டைபூச்சி மருந்து...

டாக்டர்: மூட்டை பூச்சி மருந்துக்காரனையா காண்ட்ராக்டரா வச்சிருக்கீங்க?

அந்த இளம் பெண்ணே சிரித்துவிட்டாள்.

டாக்டர்: ஆமா, எதுக்கு மருந்து சாப்பிட்டே?
பெண் மௌனம்.

டாக்டர்: காதல் தோல்வியா?  என்னவோ காதல் தோல்வி சோகமான விஷயம்கிற மாதிரி மருந்து குடிச்சிடறீங்க.. காதல் வெற்றி அதை விட பெரிய சோகம்கிறது எங்களுக்கில்ல தெரியும்? உனக்காவது கொஞ்ச நாள் அவஸ்தை.. எங்களுக்கு  வாழ்நாள் முழுக்க அவஸ்தை.. இனிமே மருந்து சாப்பிடுவே?

இளம்பெண் : ஜென்மத்துக்கும்  மாட்டேன் சார்.. 

இன்னொரு சுவாரசியமான கேஸ்.

குடும்பத் தகறாரில் கணவரிடம் கோபித்துக் கொண்ட மனைவி தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். என்ன சாப்பிட்டார் தெரியுமா?

கொசுவர்த்திச் சுருளை பிரில் இங்க்கில் முக்கி, தின்றிருக்கிறார்.. ! ! ! ! 

நாள் : 16-Feb-16, 1:41 pm

மேலே