சுகத்தை வேண்டி எந்தையும் தாயும் சகத்தினில் செய்த தவறே...
சுகத்தை வேண்டி எந்தையும் தாயும்
சகத்தினில் செய்த தவறே நாங்கள்
முகத்தினைப் பார்த்து பிச்சையைக் கூட
வாங்கிட முடியா கோழைகள் நாங்கள்
அகத்தினில் அன்பு உள்ள உலகீர்
மகத்தான உதவிகள் எங்களுக்கு அருள்வீர்
யுகங்கள் தோறும் நன்றியுடன் இருப்போம்
பகைமை கொண்ட நெஞ்சம் எங்களது இல்லை !
விவேக்பாரதி