முதல் காதல், முதல் பிரிவு ! தோளோடு தோள்...
முதல் காதல், முதல் பிரிவு !
தோளோடு தோள் பேசி !
கண்ணோடு முகம் பார்த்து !
செல்லமாய் சண்டையிட்டு !
கொஞ்சலாய் காதை திருகி !
முத்தங்களின் சுவை மறந்து !
கண்ணீரில் சட்டை நனனைந்து !
துப்பட்டாவில் மழை மறைத்து !
சின்னதாய் கவிதை சொல்லி !
மெலிதாய் நீ சிரித்து !
குட்டி குட்டி குறுஞ்செய்தி அனுப்பி !
யுகங்களை நொடிகள் ஆக்கி !
அலைபேசி அழும் வரை கதை பேசி !
உன்னுடன் வாழ்ந்த காலங்கள் எல்லாம்
மார்கழியில் பிறந்த கணவாய் கலைந்ததடி !
தண்ணீரில் மிதக்கும் ஓட்டை படகாய்
என் வாழ்வும் உன் நினைவில் முழ்குதடி !