எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் அரக்க வம்சம்- எனக்கு இன்னொரு முகம். இரவல்லி...

நான் அரக்க வம்சம்- எனக்கு இன்னொரு முகம்.

இரவல்லி வாசத்தில்
 தாமரைகள் தலைகுனிய
நீட்டிய கூட்டல் விகிதங்கள்
சொல்லிக் கொள்ளாமல்
ஒன்றையொன்று
அடித்துச் சாகும்

தெறிகாலை பனிப் புயலில்
தொலைத்த வெளிச்ச பவனங்களில்
முகடு தட்டிய
மலை மேகங்கள்
மந்திரித்த
மயக்கத்தில் நோகும்.

தவிடுகளின்
 கூட்ட நெரிசலில்
சிக்குண்ட புழுப் பயணம்
சாரா வாதங்களில்
மேடைதோறும் வந்து 
வாதிட்டு  போகும்

பட்டறைப் பவனிகளில்
சிவந்தெழுந்த வக்கிரங்கள்
சிற்றுளை(சிறு+துளை ) ஊர்வலத்தில்
சிதறிப்போய் வேகும்

இனி ஒரு விதி செய்யும்வரை
செம்மண்ணும் கருமண்ணும்
 கலக்காத
ஆலகாலச் சாலையில்
ஊழிச் சகடம் ஓட்டிவந்த
ஊழல்காரன் வீட்டில்
சத்தியம்
சமையல் ஆகும்.

சுசீந்திரன்.

நாள் : 7-Mar-16, 12:47 am

மேலே