எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

'A sequel to Mr.Joseph Julius's வளரும் தமிழ்...

'A sequel to Mr.Joseph Julius's வளரும் தமிழ் ' 


தமிழின்பெருமைகளை, இலக்கிய எடுத்துக் காட்டுகளுடன் சொல்லியதோடும் நிறுத்திக் கொள்ளாமல்,தமிழ் வளர்ச்சியில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றங்கள் ஏற்படாத அவல நிலையைஎடுத்திக் காட்டியதோடும் அல்லாமல் அனேக நல்ல ஆக்கபூர்வமான, செயல்பாடுகளுக்கானதீர்வுகளையும்எடுத்துச்சொல்லியுள்ளார் திரு. ஜூலியஸ் அவர்கள். உலகில், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து என மூன்று மிகச் சிறிய நாடுகளில்  மட்டும் பேசப்பட்டு வந்த ஆங்கிலம், உலகப் பொது மொழியாக இன்று திகழ்கிறது. உண்மையில் ஏழு கோடி மக்களால் பேசப்பட்டு வந்த தமிழ் இன்று இரண்டு கோடிக்கும் குறைவானவர்களால் பேசப்பட்டு வருகிறது ...என்ற இவரது கூற்றுக்குகாரணம் எதுவாக இருக்கும்?.தாய் மொழியின் முக்கியத்துவத்தை  தமிழர்கள் அறவே மதிக்காத பாங்கினையே படம் பிடித்துக் காட்டுகிறது. என்று அவர் சொல்வது மட்டுமேகாரணமா? ஆட்சியைப் பிடிக்கத்தமிழைப் பயன்படுத்திக்கொண்ட ஒரு கூட்டம் தமிழை ஆட்சிமொழியாக்கிய பின்னர் அதன்வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள்? ஆட்சியைத் தமிழுக்குக் கூட விட்டுக்கொடுக்கவில்லை என்பதுதானே உண்மை! தனியார் மயமாகும்  தொடக்கக் கல்விக்கு தடை செய்து, தமிழில் நம் பிள்ளைகள் பயின்ற பின்னரே, இரண்டாம் மொழியாக ஆங்கிலம் முதலிய பிற மொழிகளை பயிலும் வகையில் தொடக்கக் கல்விக் கூடங்கள் அமைத்துத் தரத் தவறியதோ டல்லாமல் இந்தி எதிர்ப்புப்போராட்டம் நடத்தித் திட்டங்கள் திசை மாற்றம் செய்யப்பட்டதுதானே பெரிதாகநடந்துள்ளது.  தமிழரும் இந்தியைத்தன்மயமாக்கிக் கொண்டு, பதவி மோகம் கொண்டு செய்த செயல்களினால், தாய்த்தமிழுக்குமட்டுமா துரோகம் செய்துள்ளனர்? இன்று மாபெரும் ஊழல்களுக்குத் தமிழன்தான் காரணம் அவன்தான்அதில் முதல் இடத்தில் நிற்கிறான் என்ற நிலையை அல்லவா உருவாக்கிக்கொடுத்துள்ளார்கள்!! நம் பிள்ளைகளை, ஆங்கில வழிக் கல்வி பயில்வதை நிறுத்த, பள்ளிக் கல்வியுடன், உயர்கல்வியும், தமிழ்வழி பயின்றிட போதிய கல்விக்கூடங்கள், உயர்கல்வி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அமைத்துத் தராதது யார்செய்த செய்துகொண்டிருக்கின்ற குற்றம்? கட்சிக்கு ஆட்களைச்சேர்த்தும், கட்சித் தொண்டர்களை வைத்தே அரசுத் திட்டங்களாகட்டும், அல்லது கட்சிசார்பான தொழிற்சங்கங்கள் மூலம் ஊடுருவப்பட்ட அரசு செயலுக்கான இயந்திரங்க -ளாகட்டும்எல்லாவற்றிலும், மானில நிதியையும் மக்களையும் கொள்ளையடிக்கத் திட்டங்கள்தீட்டுவதற்கே இவர்களுக்கு நேரம் போதாமல் போய்விட்ட போது, மற்றைய முன்னேற்றங்கள்எப்படி ஏற்பட முடியும்?  இக்கட்டுரை ஆசிரியர்குறிப்பிட்டுள்ள ‘துரோகம்’ இந்த வகை செயல்பாட்டின் மூலம்தான் வித்திடப்பட்டுவளர்க்கப் பட்டு, தான் மட்டுமல்லாமல் தான் உடன் அழைத்துச் செல்வதாகப் பாசாங்குகாட்டி இழுத்துச் செல்லும் பல நிலைகளில் உள்ள ‘உடன்பிறப்புக்கள்’ ‘இரத்தத்தின்இரத்தங்கள்’ அனைவருள்ளும்  பதவி மோகத்தினை வளர்த்துள்ளது என்பதை எத்தனை பேர் எண்ணிப்பார்க்கின்றனர் இன்று. மற்றப்படி ஆசிரியர் தனதுகட்டுரையில் அழகான நல்ல பல செயல்பாட்டிற்குரிய திட்டங்களைக் கோடி காட்டிச்செல்கிறார் என்பதினை, இதனைப் படிப்பவர் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் செய்வர்.ஆனால், திசைமாறிய அரசியலார் உணர்வுகளால் சீரழிக்கப்பட்ட தமிழனின் பண்பாடு இனியும்இவர்களது செயல்திட்டங்களால் விரும்பத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருமா?  படிப்பறிவில்லாத கீழ்நிலையிலிருந்தும் மக்களை மேல்வரச் செய்யும் முயற்சிகள், மெதுவாக என்றாலும்,நிச்சயமாக நல்ல பயன்களைப் பெற்றுத்தர இயலும். பண்பிழப்பிற்குக் காரணமானமக்களை இனி எந்தத் திட்டங்கள், எப்படி ஓர் உயர் நிலைக்குக் கொண்டு சேர்க்கமுடியும்? இங்கு திட்டங்கள் ‘திட்டம்போட்டுத் திருடுற கூட்டத்திற்கு’ ஆயுதங்கள். இந்நிலை மாறாமல்  மாற்றம் என்பது எப்படிச் சாத்தியமாகும். ஆனாலும் நல்வழிகளைச்சுட்டிக் காட்டி நல்ல பயன்களை எதிர்பார்ப்பதல்லாமல், நம்மால் வேறு என்ன செய்யமுடியும்? கல்வியில் தமிழுக்கும்,தமிழ்ப் பண்பாட்டிற்கும் கொடுக்க இருக்கும் முக்கியத்துவமே இதற்கு வழிவகுக்கலாம்என்ற நம்பிக்கையில், அப் பண்பாட்டிற்குக் கைகொடுத்துத் தேர்தலை நடத்திச் செல்லும்சனநாயகமே நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என்ற நம்பிக்கையுடன் இருப்போமாக!
அன்புடன்எசேக்கியல்

நாள் : 15-Mar-16, 6:53 pm

மேலே