சற்றுமுன் ஏனோ என் கைகள் தானாக எழுதிய வரிகள்.....
சற்றுமுன் ஏனோ என் கைகள் தானாக எழுதிய வரிகள்.. !
அளவுக்கு மீறிய
வயது ஏறிப்போனாலும்
அளவிட முடியா
அன்பு காதலை
நெஞ்சமதில்
பொத்தி பொத்தி
பத்திரமாய் பத்திரப்படுத்திய
பிரம்மச்சாரியவன்...!
எவளோ..? யாரோ
இவளோ ? அந்த ஊரோ..?
எங்கிருந்து வருவாளோ?
ஏங்கிய காலம்மாறி
ஏமாற்றங்கள் மட்டுமே
வாழ்வில் மாற்றங்களாக
அவனது அடையளமாக..!
மாற்றம் ஒன்றே
மாறாதது..!
ஏமாற்றமும் அப்படித்தானே..!
கேள்விக்குறியின் மீது
அமர்ந்த ஆச்சரியக்குறி அவன்...!