எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் – சிறந்த கதை கிளியின் கீச் கீச்...

                    தமிழ் – சிறந்த கதை 

கிளியின் கீச் கீச்
குயிலின் குக்கூ
புலியின் உறுமல்..ஊய்
காகங்களின் கா..கா
கா..காவில் ஒன்று கூடியது
கண்டான் ஆதி மனிதன்.  

ஆதி மனிதக் கூட்டம்
ஆறில் ஒன்று
சைகையின் போதாமை
புரிந்த போது
ஒலிக் குறிப்புகளில்
சொற்கள் செய்தார்கள்.

அம்மணம் , இலை தழை
ஆடைக்கு வந்தன.

சொற்களின் பிசுறுகள் 
செதுக்கப் பட்டன. 
வளைவுகள் நிமிர்த்தப்பட்டன. 

காலந்தோறும்
தட்டி தட்டிச்
சரிசெய்யப்பட்டது.
செதுக்கிச் செதுக்கிச்
செம்மையானது.  

உற்சாகமும் ஓய்வும்
படைப்பாற்றலும்
மொழியை அழகாக்கி
அலங்கரிக்க 
இலக்கியம் தோன்றின.

வரைமுறைப் படுத்த
இலக்கணம் கட்டமைக்கப்பட்டது
மானுடக் கொண்டாட்டங்களில்
கலைகள் உருக்கொண்டன.

ஒலிக் கூட்டமைப்பின்
மொழிக் கட்டமைப்பில்
தமிழ்
வசீகரமும் , வனப்பும்
ஒய்யாரமுமாய்
உலா வந்தது.

பிறர் , பிறர்
கண்டு , கேட்டுக்
களித்தார்கள்.

ஒப்பீடுகளின்
தராசுத் தட்டில்
தமிழ் எடையால்
தாழ்ந்தபோது
தலை நிமிர்ந்தது.

வள்ளுவன் , கம்பன்
வரிசையில்
அறிவின் வெளிச்சம்பட்டு
ஒளிச்சுடர் தகத்த காயம்.

காலந்தோறும்
சந்ததி கைகளில்
ஒப்படைக்கப்பட்டது.

சில, சின்னத் தடும்மற்றங்கள்
எதையும் குலைத்து விடவில்லை.

தமிழ்
பிறந்து வளர்ந்து
சிறந்த கதையிது. n|+���2

பதிவு : கனவுதாசன்
நாள் : 17-Apr-16, 9:06 pm

மேலே