எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எம்மொழி காலத்தால் தொன்மையும், கேட்டாலே இனிமையும் உச்சரித்தாலே பெருமையும்...

எம்மொழி 

காலத்தால் தொன்மையும், கேட்டாலே  இனிமையும்  உச்சரித்தாலே பெருமையும் தரும் மொழி, செம்மொழி. அதுவே நம் மொழி.

தேவலோகத்தில் மட்டுமே கிடைக்கும் அமிழ்தைப்போல, தமிழ் மொழியில் மட்டுமே கிடைக்கும் ‘ழ’ எழுத்தும் பெருைமை தான்.

மதங்கள் பல கடந்து மனங்கள் பல கலந்து மனிதவாழ்வுக்கு வழிகாட்டும் திருக்குறளைத் தந்த மொழி, எம் மொழி.

எழுத்துக்கள் தரும் சொல்லும், சொற்கள் தரும் பொருளும் அப்பொருளுக்கு யாப்பு மற்றும் அணிகள் கொண்டு வகுத்த இலக்கணங்கள் கொண்ட சிறப்பும் எம் மொழிக்கே !உலகில் மற்ற மொழிகள் தவழ்ந்து வந்த காலத்தில் நிமிர்ந்து நின்று அம்மொழிகளுக்கு வழிகாட்டிய மொழி, எம் மொழி.

நவீன வளர்ச்சி பெற்ற இன்றைய விஞ்ஞானமும் என் தமிழின் முன் குழந்தையே!   ‘0’  என்பது சுழி என்று உரைத்தது முதல் 1000000000000000000000 மகா யுகம் என்பதும் ¼ என்பதும் கால், ½ என்பது அரை என்றும், 1/232382453622700000 என்பது  தேர்த்துகள் என்று, அன்றே கணக்கீட்டில் துள்ளியத்தை தந்தது எம்மொழி.

எண்ணும், எழுத்தும் கண்ணென போற்றும் ஒளவை தந்த ஆத்திச்சூடி, “நாலும் ரெண்டும்” சொல்லுக்குறுதி என்னும் நாலடியார் தந்தது, எம்மொழியே.நாடு விட்டு நாடு போற்றும் தமிழை, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆட்சி மொழியாக கொண்டுள்ளது. 

மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளின் சுவையை எவ்வாறு வார்தையில் விவரிக்க இயலாதோ, அவ்வாறே இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் பெருமையையும், இரு பொருள் தரும் ஒரு சொல்  சிலேடையைப் பற்றியும்,  கூற வார்த்தை இல்லை.

எண்ணிலடங்கா பெருமைகளைக் கொண்ட தமிழின் பெருமைகைளை என் எண்ணத்திலிருந்து எழுத்து வடிவம் பெற வாய்ப்பளித்த eluthu.com க்கு என் மனமார்ந்த நன்றி.  

நாள் : 18-Apr-16, 5:04 pm

மேலே