எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆறு கோடி மக்களின் தாய்மொழி அறு சுவையை மிஞ்சுகின்ற...

  ஆறு கோடி 
மக்களின் தாய்மொழி 
அறு சுவையை 
மிஞ்சுகின்ற வாய்மொழி 

அகரத்தில் தொடங்கும் சிகரமொழி 
தகரத்தை தங்கமாக்கும் லகரமொழி 

அகத்தியன் கண்ட அமுதமொழி 
தமிழன் அகத்தினுள் கொண்ட குமுதமொழி 

ழ விற்கு பக்கத்தில் 
க வரிசை கொண்ட தனிமொழி 
க வை மெய்யாய்க் 
கனியவைக்கும் கனிமொழி 

சொற்சாலத்தால் மயங்கவைக்கும் மதுமொழி 
கல்தொன்றும் முன்தோன்றிய முதுமொழி 

வள்ளுவன் வார்த்தெடுத்த குரள்மொழி 
வல்லினத்தை வளர்த்தெடுக்கும் குரல்மொழி 

ஔவையார் பார்த்தெடுத்த வளர்மொழி 
அங்கவை கோர்த்தெடுத்த மலர்மொழி 

மதுரைச் சங்கத்தில் 
குடியிருக்கும் வான்மொழி 
மலரின் அங்கத்தில் 
குவிந்திருக்கும் தேன்மொழி 

உலகத்து மொழிகளின் செம்மொழி 
இம்மொழிக்கு ஈடு இணை எம்மொழி ? 

தமிழுக்காக தலைவணங்கும் என் சிரம் 
தமிழ் வளர என் உடல் ஆகட்டும் உரம் ..  

நாள் : 18-Apr-16, 5:54 pm

மேலே