தொழிற் கல்லூரிகளில் சேர பொது நுழைவதுத் தேர்வின் முதல்...
தொழிற் கல்லூரிகளில் சேர பொது நுழைவதுத் தேர்வின் முதல் கட்டம் நடத்தப்பட்டது. அத்தேர்வுக்கு விண்ணப்பிக்காததவர்களுக்கு இரண்டாம் கட்டத் தேர்வில் வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
@@@@
இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே பாடத் திட்டம் இல்லாத நிலையில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது சிபிஎஸ்ஸி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும். எல்லாப் பள்ளிகளிலும் ஒரே பாடத் திட்டத்தை அமல்படுத்தியபின் சில ஆண்டுகளுக்குப் பின்னரே பொது நுழைவுத் தேர்வு நடத்துவதே சமூக நீதிக்கும் சமத்துவத்துவத்துக்கும் உடன்பட்டதாக இருக்கும். இப்போது நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு சிபிஎஸ்ஸி பள்ளிகளில் படிக்காத மாணவர்களின் உரிமையைப் பறிப்பது போல் தெரிகிறது. எனவே அரசும் உச்ச நீதிமன்றமும் மாணவர்களின் நலன் கருதி பொது நுழைவுத் தேர்வை சில ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதே நல்லது.