எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிறந்த பகுத்தறிவுவாதியாக இருந்த திரு. எம்ஜிஆர் அவர்கள் எப்போது...

                     சிறந்த பகுத்தறிவுவாதியாக இருந்த திரு. எம்ஜிஆர் அவர்கள் எப்போது  பக்தராக மாறினார்?      சிறந்த பகுத்தறிவுவாதியாக இருந்த திரு. எம்ஜிஆர் அவர்கள் எப்போது  பக்தராக மாறினார்?   @@@@@@@@@@@@ முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் திரைத் துறையில் இருக்கும்வரை புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்று அழைக்கப்பட்டார். அவர் நடிகராக இருக்கும் வரையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியத் தலைவராக இருக்கும் வரையும் சிறந்த பகுத்தறிவுவாதியாக விளங்கினார். அவர் நடித்த படங்களின் மூலம் திராவிடக் கொள்கைகளைப் பரப்பினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின்  வளர்ச்சியில் அவரது பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. அதே போல அவரது வளர்ச்சிக்கும் அவர் நடித்த படங்களின் வெற்றிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. @@@@@ அவர் தாய்க் கழகத்தில் இருந்து வெளியேறிய பின் துவக்கிய கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்று பெயர் சூட்டினார். நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தில் பிராந்தியக் கட்சிகளுக்கு அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் தடை விதித்து விடுவார் என்ற அச்சம் நிலவியதால் அதிமுக என்ற தனது கட்சியின் பெயரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) என்று மாற்றினார். @@@@ எம்ஜிஆர் அவர்கள் படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்படும் வரையும் பகுத்தறிவுவாதியாகத் தான் இருந்தார் என்பதை 50 வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரிந்த அனைவரும் அறிவர். பகுத்தறிவுவாதியாக இருந்த எம்ஜிஆர் அவர்கள் தனிக் கட்சி தொடங்கிய சில ஆண்டுகளுக்குள் மூகாம்பிகை பக்தராக மாறி கர்நாடகாவில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கும் புனித யாத்திரை சென்று வழிபட்டு வந்தார். ஏன் இந்த திடீர் மாற்றம் என்பது இன்னும் புதிராகவே உள்ளது. @@@ பகுத்தறிவுவாதியாக இருந்த எம்ஜிஆர் அவர்களே பக்தராக மாறும்போது ஆச்சாரங்களை அதிகம் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் யாகம் செய்வதையும், தனது 60- வது பிறந்த நாளுக்கு திருக்கடையூர் சென்று அங்குள்ள பிரபல ஆலயமொன்றில்  வழிபட்டதையும், (தொலைக்காட்சியில் காட்டப்பட்ட நிகழ்வு),   அவரது தலைமையின் கீழ் இருக்கும் அஇதிமுக –வின் தலைவர்களும் தொண்டர்களும் மண்சோறு சாப்பிடுதல் அங்கப்பிரதட்சனம் செய்தல் தரையில் படுத்து அவரை வழிபடுவது, அவர் ஹெலிகாப்டரில் செல்லும்போது வானத்தை நோக்கிக் கும்பிடுவது போன்றவற்றை செய்வதையெல்லாம் நாம் குறை சொல்லமுடியாது. செல்வி ஜெயலலிதா அவர்கள் திராவிடக் கொள்கைகளுக்கு எதிரானவர் என்று சொல்வதும் தவறு. அக்கட்சியின் நிறுவனத் தலைவரான எம்ஜிஆர் அவர்களே திராவிடக் கொள்கையின் முக்கிய அம்சமான பகுத்தறிவு  கோட்பாட்டைக்  கைவிட்டு மூகாம்பிகை பக்தராகி அவரது கட்சியினருக்கு முன்மாதிரியாகத்தான் இருந்தார். எம்ஜிஆர் அவர்கள் மூகாம்பிகை பக்தராகும் வரை தமிழர்களில் பெரும்பாலோர்க்கு மூகாம்பிக்கை என்ற தெய்வத்தின் பெயரே தெரியாது. அது போலவே சபரிமலை அய்யப்பன் கோயில் பற்றியும் நம்பியார் போன்ற நடிகர்கள் மூலம் தான் பெரும்பாலான தமிழர்களுகுத் தெரியவந்தது.  அதுபோலவே சிதம்பரத்தில் பிறந்த ராகவேந்திரரைப் பற்றி பெரும்பாலான தமிழ்ர்கள் அறியக் காரணமாக இருந்தவர் நடிகர் ரஜினி காந்த் அவர்களே. @@@ தேர்தல் சிந்தனைச் சிற்பி – என்ற தனது படைப்பில் கவிஞர்  கவின்   சாரலன் கேட்ட கேள்விக்கு நான் அளித்த பதிலுக்கு அவர் அளித்த     சிறு விளக்கம் இங்கு பொருத்தமாக இருக்கும் என்றே   நினைக்கிறேன்::::::   view-faq/4029/ "சினிமாவில் நடிக்கும் வரை பக்த்தறிவுவாதியாக இருந்த   எம்ஜிஆர் அவர்கள் தனிக் கட்சி ஆரம்பித்தபின் மூகாம்பிகை பக்தராக   மாறிபோனாரே" --பகுத்தறிவிற்கு திரை. பக்திக்கு மூகாம்பிகை.   எப்போதுமே தமிழர்கள் ஜோராக  கைத் தட்டுவார்கள் என்பதை அவர்   நன்கு அறிவார்.    பாமரர்களில் இருவகை . ஒன்று படியாத பாமரர் மற்றொன்று படித்த   பாமரர்..   பா மரங்களாகிய நாம் எத்தனை சிந்தனைக் கனிகளை   உதிர்த்தாலும் சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று போய்விடுகிறார்கள் . என்ன செய்வது ? 

           

பதிவு : மலர்91
நாள் : 12-May-16, 11:46 am

மேலே