எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிலவு ஏய் நிலவே நீ என்ன காமனின் தூதுவநா...

நிலவு
ஏய்
நிலவே நீ என்ன
காமனின் தூதுவநா -- இல்லை
கண்ணனின் காவலனா
இரவெல்லாம் கண் விழித்து
எம் குல பெண்களை
வசீகரம் செய்கிறாய்
காதல் வலை வீசி
கானம் பாடுகிறாய்
விழியில் குடி கொண்டு
குழந்தையாய் தவழ்கிறாய்
எங்கு சென்றாலும்
ஏமாற்றுக் காரனாய்
சுற்றி சுற்றி வருகிறாய்
முகிலின் பின்னால் ஒளிந்து கொள் -- உன்னை
முத்தமிட வருகிறான் மூலவன் .......

பதிவு : rajasekar1330
நாள் : 17-Mar-14, 4:52 pm

மேலே