ஸ்மார்ட் கைபேசி ஒருநாள் அழுது கொண்டு இருந்தேன் என்...
ஸ்மார்ட் கைபேசி ஒருநாள் அழுது கொண்டு இருந்தேன் என் தோழி ஏன் அழுது கொண்டு இருக்கிறாய் என கேட்டாள் நான் சொன்னேன் எனக்கு ஸ்மார்ட் போன் வேணும் என்றேன் அதற்கு உனக்கு இப்போ ஸ்மார்ட் போன் வாங்கும் அவசியம் என்ன என்று கேட்டாள் மறுபடியும் நான் அழ ஆரம்பித்தேன் .என் கண்கள் கண்ணீரால் நிரம்புகின்றன அதை பார்த்து என் தோழி ஏய் ஏன் அழுகிற என்று என் கண்களை துடைத்துவிட நான் ஏங்கி ஏங்கி அழுதேன் என் தோழி என்னை மார்போடு அனைத்து கொண்டு என்ன விஷயம் என்று கேட்டாள் மறுபடி நான் ஸ்மார்ட் போன் வந்ததால் நடந்த இழப்புகளை சொல்ல ஆரம்பித்தேன் என் அப்பா அம்மா அலுவலகத்தில் வேலைபார்த்து கொண்டு இருக்கிறார்கள் ,இரண்டு பேருடைய கைகளில் அழகிய ஸ்மார்ட் போன் தழுவி கொண்டு இருக்கும் ஒரு குழந்தையை போல அழுக்கு படாமலே அவளவு பத்திரமாக கவனிப்பாங்க ஆனால் நான் ஒரு மகள் என்று கூட என்னை பொருட்படுத்துவதில்லை ஒரு போனை நேசிக்கும் அவர்கள் என்னை நேசிக்க மறந்து விடுகிறார்கள் ஏன் சொல்லபோனால் நான் இருப்பது நியாபகம் இல்லை , போனுடன் அதிக நேரம் செலவு பண்ணுகிறார்கள் என்னுடன் சாப்டிய என்று கூட கேட்பதில்லை எவ்வளவு முக்கியமான வேலை இருந்தாலும் போன் கொஞ்சம் சிணுங்கினாலும் ஓடிபோய்ட்டு எடுத்து பேசுவாங்க ஆனால் என்னை தொடுவதில்லை ,கொஞ்சுவதில்லை நான் வெறுமையான உறவாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் போனில் அதிக நேரம் விளையாடுவார்கள் ஆனால் என்னிடம் விளையாட மறுக்கிறார்கள் இப்படி இருக்கும்போது எப்படி எனக்கு அப்பா அம்மா பாசம் உறவுகள் அன்பு அரவணைப்பு ,கிடைக்கும் என்று என் தோழியிடம் என் வேதனைகளை வினவினேன் அவளும் எனக்கு ஆறுதல்களை சொல்லிவிட்டு என் பெற்றோர்களிடம் பேசினாள் பெற்றோர்களே நவீன காலம்தான் மிக விரைவாக ஓடிக்கொண்டு இருக்கிறது அனால் அது நிற்ப்பதில்லை நாமும் வேகமாக ஓடி கொண்டு இருக்கிறோம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துங்கள் ஆனால் தேவைக்கு உபயோக படுத்துங்கள் தேவை மீறி போனால் நாம் இழப்பது ஏராளம் நாம் தொலைத்து போன சொந்த பந்தங்கள் மீண்டும் நமக்கு கிடைப்பதில்லை உறவுகளை தொலைத்தால் நாமும் தொலைந்து போகிறோம் குடும்பம் என்பது ஒரு பல்கலை கழகம் அதில் கற்பது ஏராளம் தினம் தினம் வாழ்க்கை என்னும் பாடத்தை நாம் கற்பித்து கொண்டு இருக்கிறோம் எனவே ஸ்மார்ட் போனுக்கு அடிமை ஆகாதபடி வாழ்க்கை பாதையை ஸ்மார்ட்டாக அமைக்க என் அன்பின் வாழ்த்துக்கள் ஒழிக ஸ்மார்ட் போன் ,வளர்க்க ஸ்மார்டான குடும்பம்