எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் தூக்கமும் தொலை தூரம் சென்றது சிதறிக் கிடந்த...

 என் தூக்கமும் தொலை தூரம் சென்றது 
சிதறிக் கிடந்த உன் நினைவுகள் 
என்னை கடந்த பொழுது
என் இதழ்களும் ஒன்று சேர்ந்தே 
ஓய்வின்றி சிரித்தன
உன் பெயரை உச்சரித்தே 
என் விரல்கள் அச்சிட்டு 
முடித்த பொழுது
என் விழிகளும் பல முறை 
பார்க்க தூண்டியதே 
உன்னை பற்றி பகிர்வுகள் செய்த 
பதிவுகளை
என் பிரதிக்கும் பெறுமதி சேர்த்த 
உன்தன் சிரிப்பினை காண ஆசைதான் 
ஆனால் 
அது கிடைப்பதும் அரிது 
என்பது என் வாதம் தான்
அப்போது உன் அருகில் இருக்க 
ஆசை கொண்ட என் மனமும் 
இப்போது உன்னை விட்டு 
தொலைவில் இருக்க விரும்புகின்றன 
உன் நலம் கருதி  


பாயஸ் அஹமட் 

நாள் : 22-Jun-16, 9:50 am

மேலே