எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், பெ. மாதையன் நியூ...

சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம்,

பெ. மாதையன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர் சென்னை-600098.

 பக். 120, விலை. ரூ. 50/

இந்த ஆய்வு சங்ககால கிளைச் சமுதாயம், சங்ககால வேளாண் பொருளாதாரம், அரசும் வேளாண் பொருளாதாரமும், வேளாண் சமுதாயம், போரும் உழவும், வேளாண் சடங்குகள், வேளாண் சமுதாய மும் பெண்களும், வணிகப் பொருளாதாரமும் வேளாண் சமுதாயமும் என எட்டு தலைப்புகளில் வேளாண் சமூக இயல்புப் போக்குகள் இந்நூலில் ஆராயப் பட்டுள்ளது. இந்த ஆய்வு சங்க கால வேளாண் சமுதாயத்தின் பல்வேறு பரிமாணங்களையும் விளக்கும் ஆய்வாய் அமைந்துள்ளது. சங்கச் சமுதாயம் உணவு உற்பத்தி செய்யும் சமுதாயமாக உடமைச் சமுதாயமாக மாறிய சூழலில் நிலமே அடிப்படை ஆதாரமாக அமைகின்றது. இந்நிலையில் நிலத்தை மையப்படுத் தியே சமுதாய வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நால்வேறு திணைகளிலும் வேளாண் சமுதாயம் அந்தந்த நிலச் சூழலுக்கு ஏற்ப ஆளுமை பெறுகிறது. என்று இந்நூல் நிறுவுகிறது. வளமை- பெண்கள் இவற்றுக்கு இடையே ஆன தொடர்பு ஆராயப்பட்டு வேளாண்மை பெண்டிர் தம் செயல்பாடாகவே ஆரம்பத்தில் இருந்து வந்துள்ளதை இந்நூல் சான்றாதாரங்களுடன் நிறுவுகிறது. வேளாண் சமுதாயத்திலிருந்துதான், மன்னர்கள் உருவாகி உள்ளனர் என்பதை இந்நூல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வேளாண்மையின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்த தமிழ் சமூகம் என்பதை அறிய இந்நூல் பேருதவியாகும்.

நாள் : 27-Jul-16, 8:05 pm

மேலே