எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 16"வாழ்க்கை என்பது...

  "எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 16"வாழ்க்கை என்பது யாராலும் அறியப்படாத ஓர் அழகான ரகசியம்.சிலருக்கு எல்லாம் கிடைத்து விடும் பலருக்கு கிடைக்க வேண்டியதும் இல்லாமல் போய் விடுகிறது.இந்த எண்ணத்தில் இருவரின் வாழ்க்கையின் நிலைமை வெளிப்படுத்தப்படும் வெறும் என் கற்பனையாக ஆனால் இந்த வாழ்க்கையையும் பலர் வாழ்ந்து இருப்பார்கள் வாழ்ந்து கொண்டும் இருப்பார்கள்.


சிறு வயதில் தாயை இழந்த சிறுமி..தந்தை அவள் தாயின் தேகத்தை மட்டும் நேசித்திருப்பான் என்று நினைக்கிறேன்..பத்து நாட்கள் கழியும் முன் இன்னுமோர் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி இல்லறம் கொள்ள முனைந்து கொள்கிறார்.சித்தி என்ற கோணத்தில் அவள் இவள் மேல் பாசம் என்பதை ஒரு நாள் கூட காட்டியதில்லை..நாட்கள் நகர இவளின் இருப்பு அவள் தந்தைக்கும் சுமையாகி விட்டது காரணம் சித்தி வழியில் இன்னுமோர் சேய் உறுதியான சேதி..இவள் மேல் வீணாக கள்ளப்பட்டம் சுமத்தி சாணியை ஊரால் எரிய வைத்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்க்கிறார்கள்...,குற்றம் செய்யவில்லை ஆனாலும் பறவைகள் போல் இவளின் வாழ்க்கையும் கழிந்து போகிறது...,

கல்வியில் சிறந்த மாணவன்..ஆனால் இவன் சேர்க்கை மிகவும் மோசமானது.இன்பம் என்ற பாதையில் தீமையை தேடி தன்னை அழித்ததும் மட்டுமின்றி தன்னை சுமந்த தாயையும் தந்தையையும் தூக்கு கயிருக்கு பலி கொடுத்தவன்.மது,பெண் இன்பம் என்ற ரீதியில் இவன் குற்றம் செய்த போதிலும் கொலை என்ற எல்லைக் கோட்டில் நுழையாதவன்.காலம் யாரைத் தான் விட்டு வைத்தது இவன் சகாக்கள் செய்த கொலையில் பாவம் இவனே முழு குற்றவாளியாக சட்டத்தில் முன் நிறுத்தப்படுகின்றான்.தணடனை வழங்கும் பருவத்தில் இவன் இல்லாத காரணத்தால் இவனும் சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் இணைந்து கொள்கிறான்.குற்றம் செய்தும் செய்யாத குற்றம் சிலுவை..,

விதி  எழுதும் இறைவன் செய்யாத குற்றம் என்ற கோணத்தில் இவர்களை சேர்த்து வைக்கும் மதியின் நகர்வில் காலத்தை எழுத நினைக்கிறான்.இவளை பார்க்கும் நேரம் அவன் தன்னை சுமந்து நிரந்தரமாக பிரிந்து சென்ற தாயை நினைக்கிறான்..கண்ணீர் கண்ணில் கடலானது..இதைக் கண்ட இவளும் அன்பாக அவன் கைகளை பிடித்து ஆறுதல் சொல்கிறாள்.இருவரும் மறைக்க வேண்டிய கடந்த வாழ்க்கையின் புத்தகத்தை வாய் மொழியில் பரிமாற்றிக் கொள்கிறார்கள்..தண்டனை காலம் இருவருக்கும் நல்ல செயலின் காரணமாக ஒரே நாளாக குறிக்கப்படுகிறது.தெய்வீகமான தூய்மையான இவர்கள் உள்ளத்தில் விதையாக விழுந்து விருட்சமாக வளர்ந்து கிளைகள் செழித்து விடுதலையின் பின் பூக்கள் பூக்க காத்திருக்கிறது..அவன் பாவம் நான் காமத்தை தேடிய பாவியம்மா என்னை நீ எப்படி....???என்று முடியாத பல கேள்விகளை தொடுப்பான்..அவளும் நான் பெண்மை தான் ஆனால் நீ என்னை அம்மா என்று தானே அழைக்கிறாய்.காதலி என்ற கோணத்தில் நான் இருந்தாலும் நானும் உன் தாய் தான்..தாயை எந்த பிள்ளை....??என்று அவள் வார்த்தைகள் நீண்டு கொண்டு போக அவள் வாயில் கை வைத்து வேண்டாம் என்று தலையின் அசைவில் வார்த்தை எழுதுவான்.

சிறையிலிருந்து அவர்களை காலம் மீட்டது.புதிய கதிரவன் வாழ்க்கையில் உதயமாக தொடங்கினான்..அங்கு செய்த தொண்டுக்காய் சில பணங்கள் வாழ்க்கையை நகர்த்த கிடைத்தது..அவளின் இருப்பையும் அவளின் இருப்பையும் திரும்பி போய் பார்க்க விரும்பாத உள்ளங்கள் புதிய பாதை தேடி பயணம் செய்யும் நேரத்தில் அந்த காப்பக வாசலில் இன்னுமோர் சிறுமியும் சிறுவனும் கைதியாக கொண்டு வரப்படுகிறார்கள்..அவர்களின் பார்வைகள்  இவர்களின் கண்களில் கண்ணீரை கொடுத்து நினைகளாவது உண்மையை புரிந்து கொள்ளுங்கள்..நாங்கள் குற்றவாளி இல்லை என்று தொலைத்த கனவை தொலையாத வாழ்க்கையில் கழிக்க எண்ணுகிறது 

சுமையான நிகழ்வை உள்ளங்கள் கண்ணீர் சிந்தி தாங்கும்..கலைஞர்கள் உள்ளம் உண்மையில் களி தான் எதை படிக்கும் நேரத்திலும் அதனுள் வாழ்ந்து விட்டு தான் வெளியில் வருவார்கள்..என் எண்ணம் உங்கள் மனதில் தாக்கத்தை விளைத்திருந்தால் அதனை கவியாக செதுக்கி கருத்திடுங்கள்.  

நாள் : 28-Jul-16, 12:09 am

மேலே