எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செ ன்ற வாரம் நண்பர்களுடன் காபாலி படம் பார்க்க...

சென்ற வாரம் நண்பர்களுடன் காபாலி படம் பார்க்க சென்றிருந்தேன், அதில் கபாலி கதாபாத்திரம் தனது மகளுடன் சென்னை வருவது போன்று ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும், சென்னையில் வசதிகளை செய்துகொடுக்க ‘அன்பு’ என்ற நபரை கபாலியின் நண்பர் ‘அமீர்’ ஏற்பாடு செய்திருப்பார், அன்புவால் வர முடியாததால் ஜெய் என்பவரை அன்பு விமானநிலையம் அனுப்பி வைத்திருப்பார். ஜெய் எனும் கதாபாத்திரம் கபாலியும் மகளும் ஒருவித சந்தேக கண்ணுடன் பார்ப்பதைக்கண்டு ஒரு வசனம் பேசுவார் “ நம்பி வந்தோர் கைவிடப்படார், மெட்ராஸ் காரங்க சார், பயப்படாம வாங்க” இதைக்கேட்டதுமே அருகிலிருந்த நண்பர்களுள் ஒருவர் படக்கென ஒரு கமென்ட் அடித்தார், அவர் பணி நிமித்தமாக இரண்டாண்டுகாலம் சென்னையில் இருந்தவர்.



சரி விஷயத்துக்கு வருவோம், இருவாரங்களுக்கு முன்னர் சென்னையில் இருந்தேன், சரியாக சொல்லவேண்டுமானால் கபாலி ரிலீஸ் அன்று, ஏற்கனவே இருமுறை சென்னையில் எமாற்றப்பட்டுள்ளேன்(!), இந்த முறையாவது ‘அலர்ட்டா இருடா ஆறுமுகம்’ என்பதுபோல் உஷாராக இருக்கவே ஆசைப்பட்டேன், வந்த வேலை முடிந்து வீட்டிற்கு புறப்படும் நேரம் நெருங்கியது, ‘இவ்ளோ தூரம் வந்தாச்சி, மெட்ரோ ரயில் ல போயிதான் பாப்பமே’ என்ற ஆவல் மனதுக்குள் தொற்றிக்கொண்டது , சரி ‘போயிர்லாம்’ என்றவாறு ‘வேளச்சேரி’ யிலிருந்து ‘ஆலந்தூர்’ செல்ல ‘மாலா’ (எஸ் நீங்க மனசுல நெனச்ச அதே கேப் சர்வீஸ் தான், லைட்டா பயம் அதான் மாத்திட்டேன்) ஆட்டோ ஒன்றை புக் செய்தேன், அடிப்படையில் நான் ஒரு மிடில்கிளாஸ் என்பதால் செலவை குறைக்கவே விரும்பினேன், ஆகவேதான் மாலா டாக்ஸிக்கு பதிலாக ‘ஆட்டோ’ வை புக்செய்தேன், புக் செய்த சில நிமிடங்களில் நான் இருக்கும் தெருவின் மூனையில் ஆட்டோக்காரர் நின்றுகொண்டு நான் வீட்டைவிட்டு வெளியிலிறங்குவதை கண்டதும் “சார் , சார்” என கூக்குரலிட்டார்.

‘பரவால்லையே, செம்ம ஸ்பீடா வந்டாப்ல’ என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன், வாகனம் புறப்பட்டது ‘எப்டி போலாம் சார்’ என என்னிடம் கேள்வியை தொடுத்தார், நமக்குதான் சென்னை புதிதாயிற்றே ‘நேராவே போங்ணா’ என்றேன், நான் வெளியூர்வாசி என்பதை எனது பேச்சு வழக்கில் புரிந்து கொண்டார், ஆட்டோவில் மீட்டர் கட்டணம் 25 ரூபாயிலிருந்து துவங்கியது (அல்லது 35), ‘எங்க போய்னுருக்கீங்க சார்’ என பேச்சை ஆரம்பித்தார், நானும் ஆர்வக்கோளாரில் ‘ஆலந்தூர் மேட்ரோல ஏறி கோயம்பேடு போயி கோயமுத்தூர் போகனுங்ணா’ என உளறிவிட்டேன், பின்னர் சுதாரித்துக்கொண்டு கூகுள் மேப்ஸ் உதவியுடன் சரியான திசையில் தான் பயணிக்கிறதா என்பதை உறுதி செய்தேன், முதல்முறை மாலா பயணம் என்பதால் முன்கூட்டியே 150 ரூபாய் மாலா மணியாக லோடு செய்து வைத்திருந்தேன், பீனிக்ஸ் மால் மற்றும் சென்னை நகர போக்குவரத்தை பார்த்தபடி ஆலந்தூர் சென்றடைந்தேன், ஆட்டோவில் இறுதி மீட்டர் கட்டணம் 95 ரூபாயை எட்டியிருந்தது.

அப்பொழுதே மனதுக்குள் சிறு சந்தேகம் எழுந்தது, எஸ்டிமேட் பயண கட்டணம் 60 ரூபாய் மேக்சிமம் என காட்டியது, இருந்தும் நான் கேட்கவில்லை (தட் தப்பு பண்ணிட்டியே சேகரு மொமன்ட்), ஆட்டோக்காரர் என்னிடம் பணம் கேட்டார், நான் என்னிடம் மாலா மணி இருப்பதாகச்சொன்னேன், அதற்கவர் அவருடையா போண் ‘சுட்ச் ஆப்’ ஆகிவிட்டதாக சொன்னார், நானும் அதைநம்பி புத்தம் புதிய நுறு ரூபாய் தாளை நீட்டினேன், படக்கென வாங்கியவர் ‘ஒக்கே சார்’ என்று கிளம்பிவிட்டார், நானும் ‘5 ரூபா தான எக்ஸ்ட்ரா, போனா போயிட்டு போகுதுன்னு’ கெத்தா மெட்ரோ ரயில்நிலையத்தினுள் சென்றேன், உள் நுழைந்ததும் விஜயகாந்த் விட்ட அலப்பறைகள் தான் முதன் முதலில் ஞாபகத்துக்கு வந்தது, உள்கட்டமைப்பு வசதிகளைக்கண்டு வியந்து நிற்கையில் ஒரு மெசேஜ் வந்தது மாலா விடமிருந்து, எனது பயண கட்டணமாக 67 ரூபாய் (வரி உள்பட) மாலா மணியிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டதாக, அதிர்ந்து போய் ‘ ச்சை ********** மறுபடியும் எமாத்திட்டானுங்கடா ‘ என மனதிற்குள் கண்டபடி திட்டிவிட்டு நகர்ந்து சென்றேன், ஆக எனது மொத்த பயண கட்டணம் 167 ரூபாய்.

அந்த படத்தின் வசனம் மெட்ராஸ் காரர்களை பற்றி என்னை எழுத தூண்டியது, நண்பர் ஒரு கமெண்ட் கொடுத்தார் என முதல் பத்தியில் சொன்னேன் அது இதுதான் ‘ ஆமாண்டா மெட்ராஸ் காரங்களா,. டவுசர கல்டிட்டுதான் விடுவானுங்க’ என்று, ஆக மீண்டும் என்னை ‘ஏமாத்தினு போய்ட்டான்’. இதுவே எனது ஒருநாள் சென்னை அனுபவம்.

வேகமாக நகர்ந்து வரும் இயந்திர உலகில் எதையும் அவசரகதியில் கடந்து செல்லும் மக்களிடையில் இந்த கட்டுரை உங்களை கடுப்பேறாமல் ‘முழு’மையாக (முழு <3 ) படிக்க தூண்டியிருக்குமெனில் நான் அதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த கட்டுரை உங்களுக்கு புடிச்சிருந்தா ‘லைக் பண்ணுங்க , கமென்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, ‘சப்ரைஸ்’ பண்ணுங்க’...

கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே டாவ்...

முஹம்மது சஹீது.  

நாள் : 7-Sep-16, 2:08 am

மேலே