எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு ********** தென்னகத்தில் மலையாளிகள்,...

நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு
**********
தென்னகத்தில் மலையாளிகள், கன்னடர்கள் தெலுங்கர்கள் ஆகியோருக்கும் தாய் மொழிப் பற்றும் (மொழி சார்ந்த) இனப்பற்றும் தமிழர்களில் பெரும்பாலோர்க்கு கிடையாது. தமிழர்களில் பெரும்பாலோர் அவர்களது பிள்ளைகளுக்குச் சூட்டும் பெயர்களே இதற்கு தக்க சான்று.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவுடன் கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசியல் கட்சிகளின் நிலையை நினைத்தால் தமிழுணர்வு உள்ள அனைவரும் கூனிக் குறுகி வெட்கப்படும் அவல நிலை. குறைந்த பட்சம் எதிர் கட்சித் தலைவர்களாவது ஒன்றுபட்டு தமழக விவசாயிகளின் நிலையை எடுத்து விளக்க ஆந்திரா, கர்நாடகா, கேரள முதல் அமைச்சர்களையும் வேளாண் அமைச்சரையும் சந்தித்துப் பேசியிருக்க வேண்டும்.

எதிர் கட்சிகள் ஓரணியில் நின்றாவது எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம்.

முதலில் கன்னடர்கள் தெலுங்கர்கள் மலையாளிகளைப் பார்த்தாவது தமிழக அரசியல்வாதிகள் மொழிப் பற்று மொழி சார்ந்த இனப்பற்றை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

அய்யன் திருவள்ளுவர். கண்ணகி ஆகியோரை மதிக்காத அரசியல்வாதிகளும் தங்களைத் தமிழர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். பொது மேடைகளில் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டத் தயங்கும் அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள்.

செம்மொழி என்ற சொல்லையே வெறுக்கும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் ராம் வசந்த் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது:"நான் தெலுங்குக்காரனாக மாறலாமா என்று எண்ணத் தோன்றுகிறது".

தமிழர்கள் மற்றும் தமிழக அரசியல்வாதிகளை நினைத்தால் "நான் ஏன் தமிழனாகப் பிறந்தேன்?" என்று என்னையே கேட்டுக்கொள்ளத் தோன்றுகிறது.

பதிவு : Anbumani Selvam
நாள் : 6-Sep-16, 10:41 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே