அண்ணா பற்றி அறிந்த அரிய தகவல்கள் முனைவர். மா....
அண்ணா பற்றி அறிந்த அரிய தகவல்கள்
முனைவர். மா. தியாகராஜன்

முன்னுரை
“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல;”
வேட்ப மொழிவதாம் சொல;”
– என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவார் தம் வாக்கிற்கிணங்க. பேரறிஞர் அண்ணா அவர்கள். தம்மை விரும்பித் தம்பியாய் வந்தோரை என்றும் பிணித்திருக்கும் வகையிலும், தம் சொல்லை ஏற்றுக் கொள்ளாத பகைவரும் அண்ணாவுடன் வந்து இணைந்திருக்க விரும்பும் வகையிலும் பேசுகின்ற பேச்சாற்றல் மிக்கவராக விளங்கினார்கள். அண்ணா பேச்சாளராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும். நாடக ஆசிரியராகவும் விளங்கினார். தமிழ் மொழி உயர்ந்திட, தமிழர் கலைகள் மலர்ந்திட, மனித நேயம் சிறந்திட, மதவெறி தொலைந்திட அறிஞர் அண்ணா தம் எழுத்தாற்றலையும் - பேச்சாற்றலையும் பயன்படுத்தினார்.
அண்ணா பார்ப்பதற்கு எளியவர் - பழகுவதற்கு இனியவர் - தம்மைத் தரக்குறைவாகத் தாக்கிப் பேசுபவரிடத்தும் இன்சொல்லே பேசும் இயல்புடையவர் - பகைவருக்கும் அருளும் பண்புடையவர் - அவர் தம் வாழ்வும் வாக்கும் உலக மக்கள் அனைவராலும் அறிந்து கொள்ளப்பட வேண்டியவை. அவை சமுதாயத்தில் நேர்மையும் தூய்மையும் மலரத் துணை புரிபவை.