எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உண்மையான பொய்யை மெய்யான உண்மையாக்கல் கடினமே. அவ்வாறு ஆக்கினாலும்...

உண்மையான பொய்யை மெய்யான உண்மையாக்கல் கடினமே. அவ்வாறு ஆக்கினாலும் அதற்கு குறை மாதத்து குழந்தையின் நிலையே தவிர, நிறை பொக்கிஷமாய் ஆயிடாது. பொய்யான உலகில் மெய்யான வாழ்க்கை வாழ்தல் கடினமாயினும் அந்த வாழ்க்கை பொய்யால் மாத்திரம் கழிந்தால் அது உப்பில்லாப் பண்டமாயே ஆயிடும்.
சிறந்த புரிதல், புரிதலையும் தாண்டி பொறுமை, பொறுமையையும் தாண்டி புரிதல்... என சிறந்த புரிதலும், அளவுக்கதிகமான பொறுமையும் பொய்யான உலகில் மெய்யான வாழ்க்கை வாழ்ந்திட உதவுமென்றால் அது உண்மையே. புரிதல் இது ஒரு மாயை.... எல்லோர்க்கும் இதன் பொருள் புரிவதில்லை. சிறந்த புரிதல் காதலை வித்திடும். காதல் புரிதலில் தங்கியே வாழ்கின்றது. இந்த உலகத்தின் அதிசயங்களுக்கெல்லாம் அதி தேவதையாய் மனிதனை கொஞ்சம் மிருகமாக்கிப் பார்த்து ... பின் அவனை அதுவாகவே மாற்றி அதற்குள் கரைந்து போகச் செய்வது எதுவோ... அதுவே காதல். இல்லை புரிதலும் எனலாம். எண்ணப் பரிமாறல்களின் ஏதோ ஒரு நிறுத்தத்தில் ஓர்இதயம் சறுக்கி இன்னோர் இதயத்தில் விழுந்திட நேர்கிறதே அது தான் காதல்.
காதலின் வெற்றி பொறுமையின் தொப்புள் கொடி உறவைப்போன்றது. பொறுமையில்லாக் காதல் தண்ணீரற்ற குளத்தில் நீந்தித்திரியும் மீனைப்போன்றது. பொறுமையின் ரகசியம் ஒவ்வொருவரின் கொள்கைக்கேற்ப மாறுபடும். தத்தமது கொள்கை பொறுமைக்கு முதலிடம் கொடுத்தால் அது சிறந்த புரிதல்களை உண்டாக்க வல்லவயாய் அமைந்திடும். நல்ல பரணியில் பொய்யை புறந்தல்லிட்டு மெய்யாய் வாழ்ந்திட வழி சமைப்போம்.
U.L. அப்துல் பாசித்

நாள் : 20-Sep-16, 10:01 am

மேலே