இதுவும் ஒரு கள்ளிக்காட்டு கவிதை ----------------------- கள்ளிக் காட்டு...
இதுவும் ஒரு கள்ளிக்காட்டு கவிதை
-----------------------
கள்ளிக் காட்டு ராணி
பேச்சியம்மாள் ...
கவிதைக்கு மட்டும் ராணி ....
கள்ளிக்காடு என்றவுடன்
சோளத்தட்டையும் , சோற்றுறுண்டையும்
கூட வெறுப்பு காட்டி போகும் ....
கவிதை நடை பாட , இவுக பொழப்பு
ஒன்னும்
கவித்துவமானதில்லீங்க. !
சிட்டுகுருவி சீட்டியடித்த
சிறுதாணியம் , சிறுவானி தண்ணிப்பட்டாலும்
சீக்கடஞ்சி போகும்.!
தூக்கனாங்குருவி தூக்கியெறிஞ்ச
தும்ப பூவும் துன்பப்பட்டு போகும்
இவுக பொழப்ப பார்த்து .!
ஏட்டி மக,
ஏசி ஏசி யே ஏர் ஓட்டுறா .!
நெல்ல கொடுத்தாலும்
வெத நெல்லா ஆக்கி
கரிசனம் காட்டிட்டா
கரிசல் காட்டு பூமிக்கு .!
கள்ளிக்காட்டு ராஜாவுக்கு
மனிதக் கறி விருந்தா போனா.!
கேப்ப களியும் , கம்பங்கூழும்
மனிதக்கறிக்கு பரிசா கிடச்சுது.!
வேசி மக ,
தொழில மாத்திக்கிட்டா
பசிக்காக முந்திவிரிச்சவ
"அந்த" மூன்று தினங்களில்
பட்டினியா கிடந்தா அப்பவும் .!
ஆக ,
பசியும் பட்டினியும்
கள்ளிக்காட்டின் பிரியா
பங்காளிகள்.!
இது வைரமுத்து நடை என
ஏளனம் பேசலாம் .!
கள்ளிக்காட்டின் பசிபாட
வேறொன்றும் வாய்க்கவில்லை .!
#கார்த்திக்