எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் உயிர் தோழிக்கு நட்பு எனும் வாழ்க்கை பயணத்தில்...

   என் உயிர் தோழிக்கு


நட்பு எனும் வாழ்க்கை பயணத்தில் 
முதல் முதலாக நுழைந்த 
என் உயிர்  தோழியே 
உன்னுடன் பழகிய அந்த அழகிய 
நாட்களை எப்படி மறக்க முடியும் 
நீயும் நானும் ஒன்றாக 
சுற்றி திரிந்த  இடங்கள் 
அடிக்கடி உன்னுடன் நானும் 
என்னுடன் நீயும் போடும்  
செல்ல சண்டைகள் 
பாடசாலையில் ஒன்றாக 
சுற்றி திரிந்த இடங்கள் 
தொலைபேசியில் உரையாடிய 
உரையாடல்கள் கவலையாக 
இருந்த போது நீ கூறிய 
ஆறுதல் மொழிகள் 
என் உயிர் தோழியே 
என் பிரியமான சகியே 
அந்த சுகமான இனிமையான 
நாட்களை நினைக்கும்போது  
அவை மீண்டும் வராதா என 
என் மனம் ஏங்கித் தவிக்கிறது.  

பதிவு : லவண்
நாள் : 24-Sep-16, 10:57 am

மேலே