எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெடிக்கொண்டாட்டம் @@@@@@@@@@@@@@@@@@ ********************************* #################################### கொண்டாடுங்கள் தீபாவளி சுற்றுச்...

  வெடிக்கொண்டாட்டம் 

@@@@@@@@@@@@@@@@@@
*********************************
####################################

கொண்டாடுங்கள் தீபாவளி 
சுற்றுச் சூழலைப் பேணி 
ஒளியின் வண்ண 
ஜாலத்தில் மயங்கி 
காசை வெடியாக்கிக் 
காதை பிளக்கும் 
ஒலியை எழுப்பி 
காற்றின் தூய்மையைக் கெடுத்து 
இயற்கையை அழிப்பது 
காலத்திற்கேற்ற இரசனை அல்ல. 
பொழுதைப் போக்கும் சந்தோஷம் 
பயனுள்ளதாய் இருக்கட்டும். 
கரியாக்கும் காசுக்கு 
நல்ல நூல்களை வாங்கி 
இல்லாதவர்க்கு அளித்து 
பேரின்பம் பெறுங்கள். 
வெடி வெடித்துப் புகை உண்டாக்கி 
சந்தோஷப் படுவது சிற்றின்ப போதையே! 

வெடித்துச் சிதறுவது நம் 
நாகரிகமும் பண்பாடுந்தான். 

நல்ல செயல்களில்தான் 
புண்ணியத்தைத் தேடமுடியும் 
இயற்கையை ஊனப்படுத்துவது 
சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது
தீபாவளி வெடிகள்!

பதிவு : மலர்91
நாள் : 23-Sep-16, 5:24 pm

மேலே