ஆண்டவன் கட்டளை பயிர் நிலம் விற்று பணம் பார்த்தேன்...
ஆண்டவன் கட்டளை
கனவுவீடு கட்ட பல் வழி காட்டினான்
திட்டம் தீட்டி தொடங்கி விட்டேன்
நித்தம் உறக்கம் பிடிங்கிவிட்டான்
கிட்ட தட்ட கட்டிவிட்டேன்
தண்ணீர் கொட்டி அரித்துவிட்டான்
மிச்சம் வைத்து பிழைப்பு நடத்தினேன்
வங்கி வட்டியால் வயிற்றில் அடித்துவிட்டான்
கட்டிய வேட்டியால் மாய்க்க தொங்கினேன்
உயிர்க்கொடுத்து உழவ சொன்னான்
உரிமை நிலத்தில் உழவனானேன்
மீண்டும் கனவு காண சொல்கிறான்!