அலைகழிக்கபட்ட ஜெ. வின் சகோதரர் மகள் @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ (தினகரன்...
அலைகழிக்கபட்ட ஜெ. வின் சகோதரர் மகள் @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
(தினகரன் 7-12-16. பக்கம் – 2 புதுச்சேரி பதிப்பு)
சென்னை: டிச. 7: தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்களாக அப்போலோ மருத்துவ
மனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்த
ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபா, எப்படியாவது முதல்வரை மருத்துவ மனையில்
பார்த்துவிட வேண்டும் என்று புறப்பட்டுச் சென்றார். மருத்துவ மனையில் பாதுகாப்பு
பணியில் இருந்த போலீசார் ஒவ்வொரு நாளும் தீபாவை உள்ளே செல்லவிடாமல் தடுத்து
வந்தனர். இதனால் 75 நாட்களாக தீபா ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் போனது.
@@@@@@@@@@@@@@@@@
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வருக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டது என்று
கேள்விப்பட்ட தீபா மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். அப்போதும் போலீசார் அவரை
உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. முதல்வர் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்ட பிறகும்
தீபா மீண்டும் போயஸ் கார்டன் சென்றார். அங்கும் அவரை நுழைய விடவில்லை.
இந்நிலையில் கதீட்ரல் சாலை வழியாக போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். அங்கிருந்த
போலீசார் அவர் குறித்து விசாரித்து வேதா நிலையத்துக்குள் விட்டனர். இந்த முறை
எப்படியாவது முதல்வரைப் பார்த்துவிடலாம என்று தீபா ஆசையாக காத்திருந்தார்.
@@@@@@@@@@@@@@
அப்போது அங்கு வந்த சில ஜெயலலிதாவின் பாதுகாப்பு படையில்
உள்ள சபாரி அணிந்த அதிகாரிகள், தீபாவை அங்கு காத்திருக்க சொன்னார்கள். அவரும்
அங்கு காத்திருந்தார். பின்னர் பெண் போலீசார் வந்து அவரை மறைத்தபடி நின்று மெல்ல
மெல்ல அங்கிருந்து தீபாவை ஓரங்கட்டினர். அதற்குப் பிறகும் முதல்வர் உடலை அவரால்
பார்க்க முடியவில்லை. காலை வரை வேதா நிலையத்தில் காத்திருந்துவிட்டு வீடு
திரும்பினார். இன்று காலையில் தான் ஜெயலலிதா உடல் இருக்கும் இடத்துக்கு அவரால்
செல்ல முடிந்தது. @@@@@@@@@@@@@@@@ மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த ஒரே
சொந்தம் அவரின் அண்ணன் குடும்பத்தினர் தான். அவர்களுக்குத்தான் குடும்ப
சம்பிரதாயங்கள், சடங்கு முறைகள் தெரியும். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடது
என்பதும் தெரியும். இறுதிச் சடங்கிலாவது தீபாவை அனுமதித்து இருக்கலாம். அதிலும்
அவரைப் புறந்தள்ளியது பொதுமக்களிடையே பெரும் அனுதாபத்தை எறொஅடுத்தியுள்ளது.
@@@@@@@@@@@@@@
{{{{ பலமுறை முயன்றும், முதல்வர் ஜெயலலிதாவை தீபா மருத்துவ
மனையில் பார்க்கமுடியாமல் போனதிற்கு யார் காரணம்? முதல்வர் இறந்த பின்பும் அவரது
உடலைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுவற்கும் யார் காரணம்?
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மாண்புமிகு பன்னீர்செல்வம் அவர்கள் இருக்கும் போது
சசிகலா மறைந்த முதல்வரின் உடல்மீது எந்தத் தகுதியின் அடிப்படையில் தேசியக்
கொடியைப் போர்த்தினார். தீபாவை பலமுறை தடுத்த காவல் அதிகாரிகளுக்கு அவர் ஜெ.
அவகளின் சகோதரர் மகள் என்று தெரியாதா? அல்லது அவரை ஜெ. விடமோ அவரது உடல்
இருக்கும் இடத்திற்கோ நெருங்கவிடக் கூடாது என்று யாராவது காவல் அதிகாரிகளுக்கு
உத்தரவிட்டார்களா?.}}}}